1. ஆபிரகாம் எலேயாசரிடம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் கொள்ள லாபானிடம் அனுப்பி பெண் கேட்கச் சொன்னான்.
ஆதியாகமம் 24:50 “அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்த காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.” என்றார்கள்.
2. கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர மற்றெல்லாப் பட்டணங்களையும் யோசுவாவும், ஜனங்களும் யுத்தம் பண்ணிப் பிடித்தார்கள்.
யோசுவா 11:20 “யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்து சங்காரம் பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.”
3. தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி ரெகொபெயாம் ராஜாவையும், யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும் மற்ற ஜனங்களையும் நோக்கி:
1 இராஜாக்கள் 12:24 “நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்த காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.”