இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போகச் சொல்லி, அதற்கு முன்பாக ஓரேபிலே கன்மலையின் மேலாக தான் நிற்பதாகவும், மோசே கன்மலையை அடிக்கும் பொழுது தண்ணீர் புறப்படும் என்றும் கூறினார். அதன்படி மோசே செய்த போது தண்ணீர் வந்தது. அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பேரிட்டான் – யாத் 17:1-7