1. யோபு: யோபு 7:11 “நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.”
2. தாவீது: சங் 64:4 “மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்;”
சங் 69:21 “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள்.”
3. சாலமோன்: பிர 7:26 “கண்ணிகளும், வலைகளுமாகிய நெஞ்சமும் கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்.”
நீதி 14:10 “இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;”
நீதி 27:7 “பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.”
4. ஏசா 38:9, 15, 17 “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சொஸ்தமானபோது எழுதி வைத்ததாவது:”
“என் ஆயுசின் வருஷங்களெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்து கொள்வேன்.”
“இதோ சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்ததிருந்தது.”
5. அப்னேர்: 2சாமு 2:26 “அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, ..”
6. ஆமோஸ்: ஆமோ 8:10 “உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.”
7. பவுல்: ரோ 3:14 “வழிதப்பினவர்களின் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது.”
கொலோ 3:19 “புருஷர்களே … உங்கள் மனைவியின்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.”
8. யாக்கோபு: யாக் 3:14 “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால்; நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்;”