கர்த்தர் ஓசியாவிடம் ஒரு சோரம்போன ஸ்திரீயையும், சோரப்பிள்ளைகளையும் அவனிடம் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். தேவனிடம் இஸ்ரவேலர் காண்பித்த உண்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சோர ஸ்திரீயைத் திருமணம் செய்யத் தேவன் கட்டளையிட்டார். தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இருந்த உறவை ஓசியா கோமோரின் உறவுடன் ஒப்பிட்டு விளக்குவது ஓசியா நூலின் சிறப்பம்சமாகும். ஓசியாவின் மனைவி தன் கணவனுக்குத் துரோகம் செய்ததால் இஸ்ரவேல் நாட்டார் யெகோவாவுக்குச் செய்த துரோகத்திற்கு உவமானமானாள். எவ்வாறெனில், கோமேர் என்பவள் தன்னை நேசித்த தன் கணவரை விட்டு வேறு பலரை எப்படிச் சேர்த்தாளோ அப்படியே தேவனுக்கு உண்மையாக இருக்க வேண்டிய இஸ்ரவேலர் தன் தேவனை விட்டு அந்நிய தெய்வங்களைப் பின்பற்றினார்கள். ஆனாலும் தேவன் மனஉருக்கமுடன் இரங்கி அவர்களைச் சேர்த்துக் கொள்வார் என்பதே செய்தி – ஓசி 1:2, 3