ஏலி முற்றிலுமாக தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தத் தவறினான். அதுபோலவே இஸ்ரவேல் தேசத்துக்கும் நல்ல ஆவிக்குரிய வழியைக் காட்டவில்லை. ஒரு தந்தை என்ற நிலையில் தன்னுடைய குமாரர்களை நீதியின் பாதையில் நடத்த செய்ய அவரால் முடியவில்லை. கூடாரவாசலில் கூட்டங்கூடுகிற பெண்களுடன் தன்னுடைய குமாரர்கள் தகாத உறவு கொள்வதைக் கண்ட பின்னும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை ஆசாரிய ஊழியத்திலிருந்து வெளியேற்ற ஏலிக்குத் தெரியவில்லை – 1சாமு 2:29, 3:13