ஏலியின் குமாரர்கள் ஆசாரிய ஊழியம் செய்தாலும் தேவநீதியின்படி செய்யவில்லை. யாராவது பலி செலுத்த வந்தால் அந்த பலியின்படி இறைச்சி வேகும் போது வேலைக்காரர்களை அனுப்பி மூன்று கூறுள்ள ஆயுதத்தால் இறைச்சி வேகிற சட்டியில் குத்துவான். அதில் வருகிறதை எல்லாம் ஆசாரியன் வைத்துக் கொள்வான். மேலும் வருகிறவர்களிடம் பச்சை இறைச்சி கொடு என்று உதவியாளர்களை அனுப்பி பலவந்தம் பண்ணி பெற்றுக் கொள்வான். இப்படிப்பட்ட பாவத்தால் மனுஷர்கள் கர்த்தரின் காணிக்கையில் வெறுப்பாய் எண்ணினார்கள். மேலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடு ஏலியின் குமாரர்கள் சயனித்து பாவம் செய்தனர் – 1சாமு 2:13, 17, 22