ஏசாயா புத்தகத்தில் வேதாகமத்தில் 66 ஆகமங்கள் இருப்பது போல 66 அதிகாரங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் இருப்பது போல ஏசாயாவில் முதல் 39 அதிகாரங்களிலும் பழைய ஏற்பாட்டு சரித்திரம் அடங்கியிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் இருப்பது போல ஏசாயாவின் பிந்தின 27 அதிகாரங்களும் சுவிசேஷ மீட்பின் செய்தியை அறிவிக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் ஒரு சிறு வேதாகமம் என்று சொல்லலாம் அல்லது பழைய ஏற்பாட்டு சுவிசேஷம் என்று சொல்லலாம்.