1. நற்செய்தியைக் கேளாதபடி இருதயங்கள் அடைக்கப்படும் என்றார் – ஏசா 6:9, 10 (நிறைவேறியது மத் 13:14, 15 மாற் 4:12 லூக் 8:10 யோ 12:37 – 41)
2. மேசியா கன்னிகையின் வயிற்றில் பிறப்பார் என்றார் – ஏசா 7:14 (நிறைவேறியது மத் 1:23 லூக் 1:26 – 35)
3. மக்கள் இடறுதற்கேதுவான ஒரு கல் என்றார் – ஏசா 8:14 (நிறைவேறியது ரோம 9:32, 33 1பேது 2:7, 8)
4. மேசியாவின் ஊழியம் கலிலேயாவில் தொடங்கப்படுவதைக் கூறினார் – ஏசா 9:1, 2) (நிறைவேறியது மத் 4:13 – 16)
5. தாவீதின் குமாரன் நித்திய ராஜா என்றார் – ஏசா 9:6, 7 (நிறைவேறியது லூக் 1:32, 33)
6. மேசியாவே தேவன் என்றார் ஏசா 9:7 (நிறைவேறியது யோ 1:1 – 8)
7. ஈசாயின் கிளை பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் என்றார் – ஏசா 11:1,2 (நிறைவேறியது மத் 3:16 மாற் 1:10 லூக் 3:21, 22)
8. வரப்போகும் ராஜா ஈசாயின் வேர் என்றார். புறஜாதியருக்கு இரட்சிப்பு உண்டு என்றார் – ஏசா 11:1 (நிறைவேறியது லூக் 1:32,33 ரோ 15:12)
9. மேசியாவே சமாதானப் பிரபு என்றார். (ஏசா 9:7) (நிறைவேறியது எபே 2:14 – 17)
10. தாவீதின் திறவுகோலை இயேசு ஏற்றுக் கொண்டார் – ஏசா 22:22 (நிறைவேறியது வெளி 3:7)
11. மரணம் ஜெயமாக விழுங்கப்படும் என்றார் – ஏசா 25:8 (நிறைவேறியது 1கொரி 15:54)
12. மேசியாவே பிரதான மூலைகல் என்றார் – ஏசா 28:16 (நிறைவேறியது 9:32, 33 1பேது 2:6)
13. மேசியா வல்லமையான அற்புதங்களைச் செய்கிறவர் என்றார் – ஏசா 35:5, 6 (நிறைவேறியது 11:4 – 6 லூக் 7:22)
14. வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் இயேசுவின் முன்னோடி என்றார் – ஏசா 40:3 –5 (நிறைவேறியது மத் 3:3 மாற் 1:3 லூக் 3:4 –6 யோ 1:23)
15. ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஊழியன் மேசியா என்றார் – ஏசா 2:1 –4 (நிறைவேறியது மத் 12:15 – 21)
16. மேசியாவின் முன்னால் முழங்கால் யாவும் முடங்கும் என்றார் – ஏசா 45:23 (நிறைவேறியது ரோ 14:11 பிலி 2:10)
17. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி என்றார் – ஏசா 49:6 (நிறைவேறியது அப் 13:46, 47)
18. தேவனுடைய ஊழியன் அடிபடுவது பற்றி கூறினார் – ஏசா 50:6 (நிறைவேறியது மத் 27:26, 30 மாற் 14:65 15:15, 19 லூக் 22:63 யோ 19:1 – 3)
19. இஸ்ரவேலர் மேசியாவை விசுவாசிக்கமாட்டார்கள் என்றார் – ஏசா 53:1 (நிறைவேறியது 12:38 ரோ 10:16)
20. தமது சொந்த ஜனத்தால் மேசியா புறக்கணிக்கப்படுவார் என்றார் – ஏசா 53:3 (நிறைவேறியது யோ 1:10)
21. தேவதாசனின் குணமாக்கும் ஊழியம் பற்றி கூறினார் – ஏசா 53:4, 5 (நிறைவேறியது மத் 8:16, 17 மாற் 1:32 – 34 லூக் 4:40, 41 1பேது 2:24)
22. பாடுபடும் தேவாட்டுக்குட்டி என்றார் – ஏசா 53:7, 8 (நிறைவேறியது யோ 1:29, 36 அப் 8:30, 35 வெளி 5:6, 12)
23. பாவம் அறியாத தேவதாசன் என்றார் – ஏசா 53:9 (நிறைவேறியது எபி 4:15 1பேது 2:22)