ஏசாயா தன் தரிசனத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் தேவமகிமையையும் கண்டான் – ஏசா 6:1-4 ஏசாயா தனது அழைப்பைக் குறித்தும், செய்தியைக் குறித்ததுமான சரியான தெளிவை இத்தரிசனத்தின் மூலம் பெற்றுக்கொண்டான். தேவனது மகிமை, மேன்மை, பரிசுத்தம் ஆகியவற்றைக் குறித்தும், தேவனுக்குப் பணி செய்கிறவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் இத்தரிசனம் வெளிப்படுத்தியது. ஏசாயா இத்தரிசனத்தால் தனது குறையையும் விசேஷமாக தன் வார்த்தைகளின் அசுத்தத்தையும் தெரிந்து கொண்டார்.