சேராபீன்களில் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தழலை ஒரு குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டார். அவருடைய உதடுகளைத் தொட்டதினால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது – ஏசா 6:6, 7 தேவன் ஏசாயாவின் வாயையும், இருதயத்தையும் பரிசுத்தப்படுத்தி இஸ்ரவேலின் பரிசுத்தருடைய சமூகத்திலிருந்து உழைக்கும் ஊழியனாகவும், தீர்க்கதரிசியாகவும் மாற்றினார். தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை அவரால் மட்டுமே தர முடியும்.