கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாக பலக்கப் பண்ணியதால் ஜனங்கள் அவரை பதினெட்டு வருஷங்கள் சேவித்தனர். இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் இடது கை பழக்கமுள்ள ஏகூத்தை எழும்பப் பண்ணினார். ஏகூத் கத்தியால் குத்தி எக்லோனைக் கொன்றான். இது கொலையல்ல. இது தேவனுடைய நேரிடைக் கட்டளையின்படி நடந்த ஒரு வகையான யுத்தம் – நியா 3:12 – 30