மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, மகா சத்தத்தோடு அலறிக் கொண்டு அரண்மனை முகப்பு மட்டும் வந்தான். இது எஸ்தருக்கு அறிவிக்கப்பட்டது. அவள் ஆத்தாகின் மூலம் செய்தி அறிந்தாள். மொர்தெகாய் எஸ்தரிடம் ”நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச் சொன்னான்.“ முடிவில் எஸ்தர் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச் செய்து மூன்று நாள் அல்லும்பகலும் புசியாமலும், குடியாமலுமிருக்கக் கட்டளையிட்டாள் – எஸ்தர் 4 :13, 14