1. ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது: நீதி 24:14 “ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்;”
2. பார்வைக்கு இன்பமாயிருப்பது: ஆதி 3:6 “அப்பொழுது ஏவாள் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கிற அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாயிருக்கிறது என்று கண்டாள்.”
3. வாய்க்கு இன்பமாயிருப்பது: நீதி 24:13 “கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.”
4. செவிக்கு இன்பமாயிருப்பது: உன் 2:14 “கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது.”
5. உயிரோடிருக்கும்போது இன்பமாயிருந்தவர்கள்: 2சாமு 1:23 “உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்.”
6. இன்பமாய் வேதத்தில் பேசினவன்: ஏவியனான ஏமோரின் குமாரனாகிய சீகேம் யாக்கோபின் மகள் தீனாளை நேசித்து, அந்த பெண்ணின் மனதுக்கு இன்பமாய் பேசினாள் – ஆதி 34:2