கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின் பானையில் மா செலவழிந்து போகவில்லை. கலசத்தில் எண்ணை குறைந்து போகவுமில்லை. அந்த விதவையின் மகன் வியாதியில் மரித்துப் போனான். எலியா அந்தப் பிள்ளையை மேல் வீட்டுக்குள் கொண்டுபோய், தன் கட்டிலின் மேல் வைத்து, அந்த பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புற விழுந்து, “இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப் பண்ணும்” என்று வேண்டினார். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய உயிர் திரும்ப வந்தது. அவனை அவன் தாயிடத்தில் கொடுத்தார் – 1இரா 17:8 – 24