எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி முகங்குப்புற விழுந்து தேவனை வேண்டினான். பின் தன் ஊழியக்காரனிடம் சமுத்திரத்தைப் பார்க்கச் சொல்லி, அவன் பார்த்து ஒன்றும் இல்லை என்றான். எலியா அவனிடம் இன்னும் ஏழு தரம் போய்ப் பார் என்றான். அவன் ஏழாந்தரம் போய்ப் பார்த்து உள்ளங்கையளவு மேகம் எழும்புகிறது என்றான். கர்த்தர் மழை பொழியச் செய்தார். கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்ததால் தன் அரையைக் கட்டிக் கொண்டு யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபின் இரதத்திற்கு முன்பாக ஓடினான் – 1இரா 18:41 – 45