சூரைச்செடியின் கீழிருந்து எலியா புறப்பட்டு நாற்பது நாட்கள் நடந்து ஓரேபில் கெபியில் தங்கினான். அங்கு அவனைக் கர்த்தர் தனக்கு முன்பாக நிற்கச் சொல்லி கடந்து போனார். பின் பலத்த பெருங்காற்று, பூமி,அதிர்ச்சி, அக்கினி இவைகள் உண்டாயிற்று. இவைகள் ஒன்றிலும் கர்த்தர் இருக்கவில்லை. இவைகளுக்குப் பின் கர்த்தர் மெல்லிய சத்தத்தில் வெளிப்பட்டு அவன் மேலும் செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்துப் பேசினார் – 1இரா 19:8 – 18