சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.” “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்றார்.” கர்த்தர் கூறியபடியே நடந்தது – 2இரா 3:10 – 20