எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப் படைகளைக் கண்டு பயந்தான். அதற்கு எலிசா கேயாசியிடம் “அவர்களோடிருப்பவரைக் காட்டிலும் நம்மோடிருப்பவர் அதிகம்“ என்று கூறி “கர்த்தாவே இவன் பார்க்கும்படி கண்களைத் திறந்தருளும்” என்று வேண்டினான். உடனே கர்த்தர் கேயாசியின் கண்களைத் திறந்தார். எலிசாவைச் சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளாலும், இரதங்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான். திரும்ப எலிசா கர்த்தரை நோக்கி “இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும்” என்று வேண்டினான். கர்த்தர் அதன்படியே செய்தார். எலிசா அவர்களை சமாரியா மட்டும் அழைத்துச் சென்றான் – 2இரா 6:8 – 23