Menu Close

எரேமியா நிலவறைக்குள்

பாபிலோனிய சேனை எருசலேமை விட்டுப்போன சந்தர்ப்பத்தில் எரேமியா ஜனத்தை விட்டு ஜாடையாய் விலகி தன் தேசத்துக்குப் போனான். அங்கு எரேமியாவைப் பிடித்து அவன்மேல் கடுங்கோபங் கொண்டு சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள். எரேமியா காவற்கிடங்கின் நிலவறைக்குள் அநேகநாள் இருந்தான். சிதேக்கியா ராஜா எரேமியாவை அழைப்பித்து தேவனுடைய வார்த்தை ஏதாகிலும் உண்டா என்று விசாரித்தான். அதற்கு எரேமியா “பாபிலோனியர் எருசலேமைப் பிடித்துக் கொள்வது மிகத்திட்டமான காரியம் என்றான்.” தன்னை நிலவறைக்குள் அடைக்க வேண்டாமென்றும், அனுப்பினால் நான் அங்கே செத்துப் போவேன் என்றும் எரேமியா கேட்டுக்கொண்டான். அதற்கு ராஜா எரேமியாவை காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான். அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான் – எரே 37:11 – 21

Related Posts