பாபிலோன் எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப் போவதாகவும், அவன் அதை அக்கினியால் சுட்டெரிப்பான் என்றும், சிநேக்கியா பிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுவான் என்றும் கூறினார். அப்பொழுது அவர்கள் எரேமியாவை தண்ணீர் இல்லாத துரவிலே கயிறுகளினாலே இறக்கிப் போட்டார்கள். இந்த விபரம் சிநேக்கியா ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் ஆட்களை அனுப்பி எரேமியாவைத் தூக்கி எடுத்தான். பின் சிநேக்கியா எரேமியாவை அரண்மனைக்கு வரவழைத்து கர்த்தரின் வார்த்தையை விசாரித்தான். அதற்கு எரேமியா 38:17, 18 “அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.”
“நீர் பாபிலோன் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப் போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப் போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”
அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவிடம் இந்தவார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். மறுபடியும் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டான். எரேமியாவைப்போல எத்தனை எச்சரிப்புகள் வந்தாலும் மனம் மாறக்கூடாது – எரே 34:1 – 7, 38:1 –27