Menu Close

எரேமியா சிறையிலிருக்கும் போது நிலம் வாங்கிய விபரம்

யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி தேவனால் அறிவுறுத்தப்பட்டான். அந்த இடம் பாபிலோனியரின் பிடியிலிருந்தது. எதிரியின் கைவசமுள்ள இடத்தில் நிலத்தை வாங்குவது நடக்கக்கூடாத செயல். ஆனால் தேவன் அதைச் செய்து முடித்தார். இந்த செயல் தேவனுடைய ஜனம் தங்கள் தேசத்துக்குத் திரும்பி நிலத்தை வாங்கி வீடுகளைக் கட்டுவார்கள் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை விளக்கிக் காட்டுகிறது. யூதாவின் நம்பிக்கை இழந்த நிலையிலும், நம்பிக்கையின் தீர்க்கதரிசன அடையாளமாக அது இருந்தது. அதேபோல நம்முடைய சூழ்நிலைகளும் நம்பிக்கையில்லாதவைகளாயிருக்கலாம். ஆயினும் நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாயிருந்தால் ஒரு நல்ல எதிர்காலத்துக்குரிய வாக்குத்தத்தமும், நம்பிக்கையும் உடையவர்களாயிருப்போம் – ரோ 8:28 எரே 32:6 – 15

Related Posts