கர்த்தர் ஒரு சணல்கச்சையை வாங்கி எரேமியாவின் அரையில் கட்டச் சொன்னார். பின் அதை ஐப்பிராத்து நதியின் கன்மலையின் வெடிப்பிலே ஒளித்து வைக்கச் சொன்னார். பின் அநேக நாள் சென்றபின் கர்த்தர் எரேமியாவிடம் ஒளித்து வைத்த கச்சையை எடுத்து வரச் சொன்னார். எரேமியா அதைத் தோண்டி எடுத்தபோது அந்த கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற் போயிற்று. இந்த உவமை எதைக் காட்டுகிறதென்றால், – எரே 13:1 – 11
இஸ்ரவேலரும், யூதரும் தான் தேவனால் அணியப்பட்ட சணல்கச்சை. தேவனோடு கொண்டிருந்த நெருங்கிய உறவுக்கு அது அடையாளமாயிருந்தது. இப்போது அம்மக்கள் பயனற்றுப் போய்விட்டதால், எரேமியா சணல்கச்சையை எறிந்து விட்டது போல தேவனால் அம்மக்களும் எடுத்தெறியப்படுவர். ஐப்பிராத்துப் பகுதியில் நாடுகடத்தப்பட்ட மக்கள் அவர்களது பாவத்தால் உபயோகமற்றவர்களாகி விடுவர். அவர்களுடைய பெருமையும், மகிமையும் மறைந்து போகும்.