Menu Close

எரேமியாவின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் கொடுக்கப்பட்ட தடைகள்

• எரே 16:2 “நீ பெண்ணை விவாகம் பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்க வேண்டாம் என்றார்.”
• இதற்குக் காரணமென்னவெனில் வரப்போகும் வேதனையில் குடும்பங்களில் பலர் மரிப்பார்கள் என்பதை சித்தரிக்கும்படி கூறப்பட்டது.
• எரே 16:5 “நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தை விட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
• இதற்குக் காரணம் தேவன் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும் மக்களிடமிருந்து விலக்கிக் கொண்டார்.
• எரே 16:8 “நீ அவர்களோடே புசித்துக் குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாக.” இதற்குக் காரணம் யூதாவின் எல்லா சந்தோஷத்திற்கும், களிப்புக்கும் தேவன் ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என்று வெளிப்படுத்த இவ்வாறு கூறினார்.

Related Posts