Menu Close

எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைச்செடி என்ற ஒப்புமை

காட்டிலிருக்கிற எல்லாச் செடிகளிலும் மேன்மை பெற்றது திராட்சச்செடி. அது வேகாதிருக்கும் போதும், வெந்துபோன பின்பும் ஒரு வேலைக்கும் உதவாது. காட்டிலிருக்கும் திராட்சைச் செடியை அக்கினிக்கு இரையாக ஒப்புக் கொடுப்பதைப் போல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுப்பேன் என்கிறார். மேலும் கர்த்தர் “தன் முகத்தை அவர்களுக்கு நேராகத் திருப்புவேன் என்றும், அவர்கள் தேசத்தை பாழாய்ப் போகப் பண்ணுவேன்” என்றும் கூறுகிறார். கனிகொடுக்காது உபயோகமற்றுப் போன திராட்சைச் செடிக்கு எருசலேமின் மக்கள் ஒப்பிடப்படுகிறார்கள். கர்த்தரிடத்தில் அவர்கள் நீதியாகவும், உண்மையாகவும் இல்லாததால் அவர்களிடம் கனியைக் காணமுடியவில்லை. எனவே அவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள் – எசே 15:1 – 8

Related Posts