• யாக்கோபு தூதனிடம்: ஆதி 32:26 “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”
• சிம்சோன் கர்த்தரிடம்: நியா 16:28 “இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொன்னான்.”
• தாவீது தேவனிடம்: சங் 51:7 “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்.”
சங் 119:18 “உமது வேதத்திலிலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
• ஏசாயாவிடம் கர்த்தர் “யார் நமது காரியமாகப் போவான்” என்று கேட்டதற்கு
ஏசாயா ஏசா 6:8 “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றான்.
• பேதுரு பெருங்காற்றினால் தத்தளித்த போது “ஆண்டவரே என்னை இரட்சியும்” என்றான் – மத் 14:30
• எரேமியா கர்த்தரிடம்: எரே 17:14 “கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்;
• தாவீது கர்த்தரிடம்: சங் 6:2 “என்னைக் குணமாக்கும் கர்த்தாவே,”