Menu Close

எதிரிகளிடமிருந்து தேவமீட்பு

1. கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கினார் – 1சாமு 12:11
2. எஸ்றாவும் அவனோடு கூட சேர்ந்தவர்களும் எருசலேமுக்குப் போகப் புறப்படும் பொழுது தேவனுடைய கரம் வழியிலிருக்கிற சத்துருக்களின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் தப்புவிக்கச் செய்தது – எஸ்றா 8:31
3. தாவீது கர்த்தர் தான் என் சத்துருக்களுக்கும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களுக்கும், கொடுமையான மனுஷருக்கும் தப்புவிக்க வைக்கிறார் என்றார் – சங் 18:48
4. கர்த்தர் எருசலேமைத் திடப்படுத்துவேன் என்றும் இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன் என்றும் உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை உன் அன்னியபுத்திரர் குடிப்பதுமில்லையென்றும் கர்த்தர் தமது வலதுகரத்தின் மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார் என்று ஏசாயா கூறினான் – ஏசா 62:8
5. சத்துருக்களின் கைகளினின்று தேவன் உங்களை விடுதலையாக்குவார் என்றும், உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் கர்த்தருக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வீர்கள் என்றும் சகரியா தீர்க்கதரிசனம் உரைத்தான் – லூக் 1:71

Related Posts