எருசலேம் நகரம் முற்றுகையிடப்பட்டு பிடிக்கப்படும் என்பதையும், முற்றுகையின் போது அதிலிருக்கும் மக்கள் ஆகாரம் தண்ணீர் குறைவினால் தவிப்பார்கள் என்பதையும் விளக்கும்படி தேவன் எசேக்கியேலை செங்கலில் எருசலேம் நகரத்தை வரைந்து கொள்ளச்செய்து அதற்கு விரோதமாகச் செய்யவேண்டியவைகளை வரிசையாகக்கூறி இரும்புச் சட்டியை இரும்புச்சுவராக நினைத்து அதை முற்றிகை போட்டுக்கொண்டிரு என்றார். (இரும்புச்சட்டி பாபிலோனியரின் முறிக்கப்படாத பெலனைக் குறிக்கிறது.) மேலும் 390 நாட்கள் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்க இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுக்க வேண்டுமென்றும், பின் 40 நாட்கள் வலது பக்கமாய்ப் ஒருக்களித்துப் படுத்து யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்க வேண்டுமென்றும், அந்தநாள்வரை புரளாமலிருக்க கயிறுகளால் கட்டுவேன் என்றும் கூறினார். எசேக்கியேல் எல்லாவற்றையும் கவனமாக நிறைவேற்றினார் – எசே 4:1 – 17