எகிப்தில் சங்காரம் நடந்த போது அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரை ஓடிப்போகத் துரிதப்படுத்தினார்கள். இஸ்ரவேலர் எகிப்தியரிடம் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். அதோடு கானானுக்குச் செல்லும் யாத்திரை ஆரம்பமானது. 430 ஆண்டுகளுக்குப்பின் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டனர். எழுபது பேராக எகிப்துக்கு வந்த இஸ்ரவேலர் ஆறுலட்சம் பேராய்ப் பெருகி ராம்சேசிலிருந்து புறப்பட்டு சுக்கோத்துக்குச் சென்றார்கள் – யாத் 12:30 – 42, எண் 33:1 – 5