Menu Close

உலக நிலையில் வரும் கனத்தின் இயல்புகள்

1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் – எண் 22: 17 யோசாபாத் ராஜாவாகி தன் தேவனின் கற்பனைகளின்படி நடந்து கொண்டதால் கர்த்தர் அவன் ராஜ்ஜியபாரத்தைத் திடப்படுத்தி கனப்படுத்தினார் – 2நாளா 17:4, 5
2. வெற்றி, செல்வம் இவற்றை ஒட்டி வருவது: யோபு செல்வச்சீமானாக உத்தமனாக இருந்ததால் வாலிபர் யோபுவைக் கண்டு ஒழிந்து கொள்வார்கள். முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள் – யோபு 29:8
3. நிலையற்றது: சங் 49:12 “கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.”
4. உலகின் பதவியுடையவரால் கிடைப்பது: நேபுகாத்நேச்சார் கல்தேயரிடம் தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தைத் தெரிவித்தால் வெகுமதிகளும், பரிசுகளும், கனமும் தருவதாகக் கூறினார் – தானி 2:6
5. விசுவாசத்திற்குத் தடைக்கல்: தேவனால் வருகிற மகிமையைத் தேடாமல் ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ள நினைக்கின்றனர் – யோ 5:44

Related Posts