Menu Close

உண்மை வாழ்வை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 3:18 “ஞானம் தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”
▪ நீதி 3:22 “கர்த்தருடைய வசனங்கள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.”
▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”
▪ நீதி 8:34 – 36 “என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.”
▪ “என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.”
▪ “எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.”
▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.”
▪ நீதி 10:16 “நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.”
▪ நீதி 12:28 “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.”
▪ நீதி 13:12 “நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.”
▪ நீதி 14:27 “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணி களுக்குத் தப்பலாம்.”
▪ நீதி 14:30 “சொஸ்தமனம் உடலுக்குஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.”
▪ நீதி 15:4 “ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.”
▪ நீதி 15:27 “பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.”
▪ நீதி 18:21 “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.”
▪ நீதி 19:23 “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.”
▪ நீதி 21:21 “நீதியையும் தயையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.”
▪ நீதி 28:16 “பிரபு புத்தியீனமாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.”

Related Posts