Menu Close

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35
2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி குஷ்டரோகியானாள் – எண் 12:1 – 15
3. துர்செய்தி பரப்பின வேவுகாரர்கள் பத்து பேர் வாதையால் செத்தனர் – எண் 13:30 – 32, 14:1 – 10, 37, 38
4. கர்த்தருடைய கட்டளையை மீறி மலையுச்சிக்கு ஏறத் துணிந்தவர்களை அமலேக்கியரும், கானானியரும் துரத்தினார் – எண் 14:40 – 45
5. ஓய்வுநாளை மீறி விறகு பொறுக்கினவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான் – எண் 15:32 – 36
6. மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக எழும்பிய கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களை பூமி விழுங்கியது – எண் 16:1 – 34
7. ஆரோனுக்கு விரோதமாக தூபம் காட்ட எழும்பின 250 பிரபுக்களை கர்த்தருடைய அக்கினி பட்சித்துப் போட்டது – எண் 16:2, 35, 26:10
8. தேவகட்டளையை மீறி கன்மலையைப் பார்த்துப் பேசாமல் கோலினால் இரண்டு தரம் மோசே அடித்ததால் கானான் தேசத்தில் நுழைய முடியவில்லை – எண் 20 :8 – 13, 22 – 24
9. மன்னா என்னத்திற்கு என்று முறுமுறுத்ததால் கொள்ளிவாய் சர்ப்பம் கடித்து அநேகர் செத்தனர் – எண் 21: 5, 6
10. மோவாபிய ஸ்திரீகளிடம் வேசித்தனம் பண்ணியதாலும், அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டதாலும் இருபத்து நாலாயிரம் பேர் வாதையால் செத்தனர் – எண் 25:1 – 9

Related Posts