Menu Close

இஸ்ரவேலரின் வீழ்ச்சிக்குக் காரணம்

1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின
தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர்.
2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர்.
3. செய்யத்தகாத காரியங்களைச் செய்தனர்.
4. தங்களுக்கு மேடைகளைக் கட்டினர்.
5. சகல மேடுகளின் மேல் விக்கிரகத் தோப்புகளை நிறுத்தினர்.
6. மேடைகளில் தூபங்காட்டினர்.
7. நரகலான விக்கிரகங்களைச் சேவித்தனர்.
8. நியாயப்பிரமாணங்களின் படி நடக்கவில்லை.
9. தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடாமலும் நடந்தனர்.
10. தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
11. கர்த்தருடைய கட்டளைகளையும், அவருடைய சாட்சிகளையும் வெறுத்தனர். அதனால் அவர்கள் தங்கள் தேசத்தினின்று அசரீயாவிற்குக் கொண்டுபோகப் பட்டார்கள் – 2இரா 17:7 – 23, 18:12

Related Posts