இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்புமைப்படுத்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்.”என்றார் – மத் 2:39 – 41