தேவன் அழிவில்லாதவர் என பவுல்: 1 தீமோத்தேயு 1 : 17 ல் “நித்தியமும் அழிவில்லாமையும் ஆதரிசனமுமுள்ள ராஜனுமாய் …” கூறுகிறார்.
ஆனால் இயேசு தனது ஆவியை பிதாவிடம் ஒப்புக்கொடுத்ததை லூக்கா 23 : 46 ல் பார்க்கிறோம்.
இதற்கு காரணமென்னவெனில்:
அப்போஸ்தலர் 2 : 32 “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்;”
எதனால் இயேசு மரணத்தை ஏற்றுக்கொண்டாரென்றால்:
எபிரேயர் 2 : 9 “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”
எபிரேயர் 2 : 14, 15 “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,”
“ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர் கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.”
அழிவில்லாத தேவன் நமக்காக தன் ஆவியை ஒப்புக் கொடுத்து, உயிர்த்தெழுந்து வெற்றிசிறந்தார்.