ஆலயத்திலிருந்து உயிர் கொடுக்கும் தண்ணீர் வருவதாக எசேக்கியேல் தரிசனத்தில் காண்கிறான். அந்த தண்ணீர் கடலில் விழும்போது, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். அத்தண்ணீர் பாயும்போது அது ஆழத்திலும், அகலத்திலும் பெரியதாகி, அது தொடும் இடமெல்லாம் பிழைத்து கனி கொடுக்கிறது. இந்த நதி சவக்கடலில் பாய்ந்தது அதைச் சாவிலிருந்து விலக்குகிறது. இந்த நதியின் இக்கரையிலும், அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும். அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை. அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை. அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த பர்வதத்திலிருந்து பாய்கிறபடியால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் – எசே 47:1-12