1. ஆரோனும் மோசேயும் இஸ்ரவேலின் தலைவர்கள் தான். ஆனால் ஆரோனின் அணுகுமுறை வேறு. மோசேயின் அணுகுமுறை வேறு. ஆரோன் மனித விருப்பத்திற்கேற்ற தலைவர் – யாத் 32:2 மோசேயோ தேவ சித்தத்திற்கேற்ற தலைவர்.
2. ஆரோன் ஜனங்களைக் குற்றம் சாட்டி தன்னைத் தப்புவிக்கிறார் – யாத் 32:22 மோசேயோ ஜனங்களின் குறையை ஏற்று தம்மை மரிக்க ஒப்புக் கொடுக்கிறார் – யாத் 32:32
3. ஆரோன் ஜனங்களை எளிதில் கைகழுவத் தயாராக இருந்தார் – யாத் 32:22-24 மோசேயோ தேவன் அழிக்க அனுமதி கேட்கும் போதும் அவர்களை அணைத்துக் கொண்டு பரிந்து பேசுகிறார் – யாத் 32:9-13
4. ஆரோன் பாவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டு காதணியைக் கொடுத்தார்கள் அக்கினியில் போட்டேன், கன்றுக்குட்டி வந்தது என்கிறார் – யாத் 32:24 மோசேயோ பாவத்தின் பயங்கரத்தை உணர்ந்தவராக மகா பெரிய பாவம் என்று அறிக்கையிடுகிறார் – யாத் 32:31
5. ஆரோன் மக்கள் நிர்வாணமாவதற்குத் துணை போகிறார் – யாத் 32:25 மோசேயோ தீமையைச் சுத்திகரிக்கிறார் – யாத் 32:26-35
6. ஆரோன் பொல்லாத ஜனங்கள் எனப் பற்றற்றவராகக் கூறினார் – யாத் 32:22 மோசேயோ தேவன் மோசேயின் ஜனம் என்றபோது உம்முடைய ஜனம் என்று திரும்ப திரும்பக் கூறினார் – யாத் 32:7, 11, 12