ஆசாரியரான அமத்சியா ஆமோஸ் தீர்க்கதரிசியை அற்பமாகப் பேசி நிந்தித்ததினால் அவனுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டது. அது என்னவென்றால்:
ஆமோ 7:17 “உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக் கொள்ளப்படும்; நீயோவேனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” என ஆமோஸ் கூறினான்.