Menu Close

ஆமோசுக்குக் கொடுத்த ஐந்தாவது தரிசனம்

தேவன் பலிபீடத்தின் அருகே நின்று அங்கு தொழுதுகொள்ள வருபவர்களின் தலையின்மேல் தேவாலயம் இடிந்து விழுவதால் அவர்களை அழிக்கும்படிக்கு கர்த்தர் செயல்புரிவதை ஆமோஸ் தரிசனத்தில் கண்டான். இதற்குத் தப்பியவர்கள் பட்டயத்தால் மடிவார்கள். அவர்கள் இதற்குத் தப்ப எங்கு ஒளிந்தாலும் தப்ப முடியாது என்பதை கீழே காணலாம்.
• ஆமோ 9:2 – 4 “அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலிருந்து அவர்களை இறங்கப் பண்ணுவேன்;”
• “அவர்கள் கர்மேலின் கொடுமுடியில் ஒழிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.”
• “அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைபட்டுப் போனாலும், பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.”

Related Posts