1. ஆபிரகாம் இயேசுவின் மகிமையான தரிசனம் பெற்றவன். அதை இயேசுவே சாட்சி கொடுத்திருக்கிறார் – யோ 8 :56, 58; ஏசா 29:22
2. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். விசுவாச வீரனாயிருந்தான். விசுவாசிகளுக்குத் தகப்பனானான் – ஆதி 15:6, ரோ 4:3 எபி 11:8
3. ஆபிரகாம் தேவவார்த்தைகள் எல்லாவற்றிற்கும் கீழ்படிந்தான் – எபி 11:8
4. ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாயிருந்தான் – யாக் 2:23
5. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் – ஆதி 20:7
6. ஆபிரகாம் செல்வசீமானாயிருந்தும், கூடாரவாசியாயிருந்து அந்நியரை உபசரித்தான் – ஆதி 13: 2, 24:1, 35,18:1-8, 19:3
7. பலிபீடம் கட்டி பலிசெலுத்தி தேவனைத் தொழுது கொண்டான் – ஆதி 12:7, 8; 13:4
8. மேல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுக்கிறவனாயிருந்தான் – ஆதி 14 :18-20; எபி 7:1 –7
9. தன் சகோதரனின் குடும்பம் சிறைபட்டுப் போனதைக் கேள்விப்பட்டு அவர்களோடு யுத்தம் பண்ணி சிறைமீட்டதிலிருந்து ஆபிரகாமின் சகோதர சிநேகத்தைப் பார்க்கலாம் – ஆதி 14 :1-16