ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம் லோத்தை நோக்கி
“நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன், நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன்.” என்றான். லோத்து சோதோம்கொமாரா கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருப்பதைக் கண்டு சோதோம்கொமாராவுக்கு நேரே கூடாரம் போட்டான். ஆபிரகாம் கானான் தேசத்தில் குடியிருந்தான் – ஆதி 13: 5 – 18