மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் மூன்று புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, நான் திரும்ப வரும்போது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் நகைத்தாள். அப்பொழுது கர்த்தர், “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” என்றார். அந்த புருஷர் சோதோமுக்கு நேராகப் போனார்கள். ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான் – ஆதி 18:1 – 22