Menu Close

ஆத்துமா எதிரிகளின் செயல்கள்

1. ஏகமாய் ஆலோசனை பண்ணுவார்கள் – சங் 71:10, 11
2. தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்பார்கள் –- சங் 71:11
3. விரோதமாக எழும்பி, பிராணனை வாங்கத் தேடுவார்கள் – சங் 86:14
4. குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தத்தைச் சிந்தவைப்பார்கள் – எரே 2:34
5. ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுவார்கள் – எரே 18:20
6. ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்கு செயல்படுகிறார்கள் – எசே 13:18
7. கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறது போல ஆத்துமாக்களை, ஆத்துமா எதிரிகள் பட்சித்து திரவியத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள் – எசே 22:25
8. கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல புடைத்தெடுப்பான் – லூக் 22:31
9. மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நம்மை போராட வைப்பான் – எபே 6:12
10. கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிவான் – 1பேது 5:8

Related Posts