1. ஆத்திரத்தில் யெப்தா பண்ணிய பொருத்தனை: யெப்தா ஆத்திரத்தில், அம்மோனியரை தேவன் என் கையில் ஒப்புக் கொடுத்தால், திரும்பி வரும்போது வீட்டு வாசற்படியில் எதிர்கொண்டு வருவதை கர்த்தருக்கு தகனபலியாக செலுத்துவேன் என்றான். அவனது வீட்டு வாசற்படியில் அவனுக்கு எதிர் கொண்டு வந்தது அவனது ஒரே மகள் – நியா 11 :; 30, 31
2. ஆத்திரத்தில் யோனத்தான் பண்ணிய செயல்: பெலிஸ்தியர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்ட சகல இஸ்ரவேலரும் யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். “சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன்.” என்று சவுல் ஆணையிட்டான். அதையறியாத யோனத்தான் தேன் கூட்டை தன் கோலினால் குத்தி சாப்பிட்டான் – 1சாமு 14:22 – 28
3. ஆத்திரத்தில் ஊசா தேவனுடைய பெட்டியைப் பிடித்தான்: கர்த்தருடைய பெட்டி நாகோனின் களம் வந்த போது மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்ததால் ஆசாரியர்கள் தொடக்கூடிய பெட்டியை ஆத்திரத்தில் தன் கையை நீட்டி ஊசா அதைப் பிடித்தான். உடனே தேவகோபத்துக்கு ஆளாகி தேவன் அடித்ததால் செத்தான் – 2சாமு 6:6,7
4. யோசியா ஆத்திரத்தில் யுத்தம் பண்ணச் சென்று மரித்தான்: யோசியா ராஜா கர்த்தருடைய வார்த்தை வந்த பின்பும் நேகோவாவுடன் யுத்தம் பண்ணச் சென்று மரித்தான் – 2நாளா 35:20 – 24