அம்மோன் நாட்டின் தலைநகரம் ரப்பா. அம்மோனியர் லோத்தின் இரண்டாவது மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லையை விரிவாக்கத் துடித்து, கீலேயாத்தின் கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகளை வாட்களால் கீறிக் கொலை செய்தனர். இதனால் தேவன் ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்தி, அது பெருங்காற்றின் புசலாக அதின் அரமனைகளைப் பட்சிக்கும். அதின் அரசரும், அதிபதிகளும் சிறைபட்டுப் போவார்கள் என்றார். சுமார் கி.மு 734ல் அசீரியாவின் மூன்றாம் திகிலாத் பிலேசரால் அம்மோன் பிடிக்கப்பட்டது – ஆமோ 1:13 – 15