1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1
2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக இருக்கிறார் என்றோ பொருள் கொள்ளலாம். இயேசு சமாதானபிரபு – ஏசா 9:6
3. இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல அழகானவர்கள் இல்லை – 2சாமு 14:25, 26 வானிலும், பூமியிலும் இயேசுகிறிஸ்துவைப் போல அழகானவர் இல்லை – உன் 5:10 – 16
4. இருவர் மரணமும் வானத்துக்கும், பூமிக்கும் நடுவில் தொங்கியபடி நிகழ்கிறது. அப்சலோம் கர்வாலி மரத்திலே தொங்கியபடி யோவாபின் மூன்று ஈட்டிகள் குத்தி நிற்க, ஆயுததாரிகள் பத்துபேரால் அடித்துக் கொல்லப்பட்டார் – 2சாமு 18:9, 14, 15 இயேசுவோ ஆணிகளிள் தொங்கியபடி மடிந்தார். மடிந்தபின் ஈட்டியால் துளைத்தனர். யோவா 19:34
5. இருவரையும் நேரடி உறவினரல்லாத பிறர் அடக்கம் செய்கின்றனர் – 2சாமு 18:17, லூக் 23:50 – 53
6. இருவரும் அடையாளத்தை நிலைநாட்டிச் சென்றனர். அப்சலோம் தனக்குப் பின் செல்வாக்கு செலுத்தும் குமாரர் இல்லை என்று சோகமாக தூணை நிறுத்தினார் – 2சாமு 18:18 கிறிஸ்து தனது மரணத்தை நினைவு கூற தமது பிள்ளைகளுக்குச் சின்னங்களைக் கொடுத்துச் சென்றார் – லூக் 22:19