▪ நீதி 3:12 “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.”
▪ நீதி 9:8 “பரியாசக்காரனைக் கடிந்து கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள் அவன் உன்னை நேசிப்பான்.”
▪ நீதி 10:12 “அன்போ சகல பாவங்களையும் மூடும்.”
▪ நீதி 14:20 “தரித்திரன் தனுக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.”
▪ நீதி 15:17 “பகையோடிருக்கிற கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.”
▪ நீதி 16:13 “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.”
▪ நீதி 17:9 “குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்;”
▪ நீதி 19:6 “பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;”
▪ நீதி 26:23 “நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.”
▪ நீதி 27:5 “மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.”