எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன் என்றும், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள். கர்த்தர் அன்னாளை நினைத்தருளி சாமுவேல் பிறக்கச் செய்தார் – 1சாமு 1:11, 20 பிள்ளை பால் மறந்தபின் அவனை தேவாலயத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து தன் பொருத்தனையை நிறைவேற்றினாள் – 1சாமு 1:24, 25