லூக்கா அதிகாரம் 1 – 8 Quiz கேள்வி பதில்
- லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது?
- அபியா என்னும் ஆசரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்?
- சகரியாவின் மனைவி பெயர் என்ன?
- எலிசபெத் யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்?
- கற்பனைகள் நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்?
- யார் மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்தது?
- கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்?
- யோவான் யாருடைய ஆவியும் பலமும் உடையவனாயிருப்பான்?
- சகரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்ட தூதன் யார்?
- ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?
- தன் முதிர்வயதில் ஒரு புத்திரனை கர்ப்பம் தரித்தவள் யார்?
- தேவனின் இரக்கம் யாருக்கு தலைமுறை தலைமுறைக்குமுள்ளது?
- எலிசபெத்தின் பிள்ளைக்கு என்ன பெயரிடப்போனார்கள்?
- கர்த்தருடைய கரம் யாரோடு இருந்தது?
- சீரியாவில் யார் தேசாதிபதியாயிருந்த போது முதலாம் குடிமதிப்பு உண்டானது?
- பெத்லகேமின் இன்னொரு பெயர் என்ன?
- இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்?
- மரியாளின் ஆத்துமாவை எது உருவிப்போகும்?
- ஏழு வருஷம் புருஷனோடு வாழ்ந்து விதவையானவள் யார்?
- அன்னாள் எது உண்டாகக் காத்திருந்தவர்களுக்கு இயேசுவைக் குறித்து பேசினாள்?
- இயேசுவுக்கு எத்தனை வயதாகும் போது எருசலேமுக்குப் போனார்கள்?
- திபேரியுராயனின் 15 ஆம் வருஷத்தில் யூதேயாவின் தேசாதிபதி யார்?
- காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்?
- வனாந்திரத்தில் யோவானுக்கு உண்டானது எது?
- வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தத்தை பற்றி எழுதியிருப்பவர் யார்?
- பரிசுத்த ஆவியானவர் எதைப் போல இறங்கினார்?
- இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது அவர் வயது என்ன?
- யோசேப்பின் தகப்பன் யார்?
- தேவனால் உண்டானவன் யார்?
- இயேசு யாராலே வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
- தேவனுடைய குமாரன் என்ற வார்த்தையில் பிசாசு இயேசுவுக்கு எத்தனை சோதனைகளைக் கொடுத்தான்?
- எலியாவின் நாட்களில் எவ்வளவு நாள் வானம் அடைபட்டது?
- இஸ்ரவேல் குஷ்டரோகிகளில் சுகமாக்கப்பட்ட ஒருவன் யார்?
- இயேசு கட்டளையிட்டவுடன் நீங்கியது எது?
- இயேசுவை கிறிஸ்து என்று அறிந்திருந்தவை எவை?
- நான் பாவியான மனுஷன் கூறியவன் யார்?
- இயேசு எதைச் சொல்லுகிறதாக வேதபாரகரும் பரிசேயரும் கூறினார்கள்?
- இயேசுவுக்கு வீட்டில் பெரிய விருந்து பண்ணியவன் யார்?
- நீ எழுந்து நடுவே நில் யாரிடம் கூறப்பட்டுள்ளது?
- இயேசு தயை செய்ய பாத்திரனாயிருப்பவன் யார்?
- எந்த ஊரில் மரித்துப்போனவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தார்கள்?
- யோவான் எத்தனை சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்?
- யோவான் யாரை ப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்?
- பாவியான ஸ்திரீ யை இரட்சித்தது எது?
- இயேசுவின் பாதத்தில் விழுந்த ஜெப ஆலயத்தலைவன் யார்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
லூக்கா அதிகாரம் 9 – 16 Quiz கேள்வி பதில்
- 5 அப்பம் 2 மீனின் அற்புதம் எந்த பட்டணத்தின் வனாந்தரத்தில் நடந்தது?
- மகிமையோடு காணப்பட்டு இயேசுவின் மரணத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் யார்?
- பட்சத்திலிருக்கிறவன் யார் என்று இயேசு கூறினார்?
- இயேசுவின் பாதத்தருகே வசனங்களைக் கேட்டு கொண்டிருந்தவள் யார்?
- பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்தவள் யார்?
- மரியாள் எதைத் தெரிந்து கொண்டாள்?
- பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எதைக் கொடுப்பது அதிக நிச்சயம்?
- யாருடைய அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது?
- இவர்களிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் இவர்கள் யார்?
- அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டவர்கள் யார்?
- ஐந்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன?
- நாம் பேசவேண்டியவைகளை நமக்குப் போதிப்பவர் யார்?
- பிதா நமக்கு எதைத் தர பிரியமாயிருக்கிறார்?
- பிலாத்து எதை கலிலேயருடைய பலிகளோடே கலந்திருந்தான்?
- சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனை பேரைக் கொன்றது?
- இது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது அது என்ன?
- வசனங்களை கேட்கும் படி இயேசுவிடம் வந்தவர்கள் யார்?
- யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்?
- ஸ்திரீ விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி எதை தேடினாள்?
- மரித்து திரும்பவும் உயிர்த்தவன் யார்?
- இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்?
- யாருக்கெல்லாம் ஊழியஞ்செய்ய ஒருவனால் கூடாது?
- தேவராஜ்யத்துக்கும் பாதாளத்துக்கும் இடையே உள்ளது எது?
லூக்கா அதிகாரம் 17 – 24 Quiz கேள்வி பதில்
- எவைகள் வராமல் போவது கூடாத காரியம்?
- அப்போஸ்தலர் எதை வர்த்திக்கப்பண்ண இயேசுவிடம் கேட்டனர்?
- இயேசுவின் பாதத்தருகே வந்து ஸ்தோத்திரஞ் செலுத்தியவன் யார்?
- நமக்குள் இருப்பது எது?
- யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களில் நடக்கும்?
- யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்?
- பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது?
- பெருமையான ஜெபத்தை ஏறெடுத்தவன் யார்?
- நீதிமானாக்கப்பட்டவனாய் வீட்டுக்கு போனவன் யார்?
- இயேசு தலைவனிடம் எத்தனை கற்பனைகளைக் கூறினார்?
- எரிகோவின் வழியருகே பிச்சைக்கேட்டு கொண்டிருந்தவன் யார்?
- இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடினவன் யார்?
- இயேசு சகேயுவை சந்தித்த ஊர் எது?
- பெத்பகே பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன?
- உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்?
- கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
- முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
- எது உடனே வராது?
- விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
- பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
- சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
- பூமியில் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருப்பதால் சோர்ந்து போவது எது?
- இயேசு இராக்காலங்களில் எங்கே தங்கிவந்தார்?
- சாத்தான் யாருக்குள்ளே புகுந்தான்?
- இயேசு பாடுபடுமுன்னே சீஷரிடம் என்ன செய்ய ஆயத்தமாமிருந்தார்?
- பேதுருவிடம் எது ஒழிந்து போகாதபடி இயேசு வேண்டிக்கொண்டார்?
- எந்த இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?
- ஸ்திரீகளின் பேச்சு சீஷர்களுக்கு எப்படியிருந்தது?
- கல்லறைக்கு ஓடி சம்பவித்ததைப் பார்த்த சீஷன் யார்?
- சீஷர்களில் இரண்டு பேர் எங்கே போனார்கள்?
- நீர் அந்நியராயிருக்கிறீரோ யார் யாரிடம் கேட்டது?
- கர்த்தர் உயிர்த்தெழுந்து யாருக்கு தரிசனமானார்?
- தம்மை குறித்து எழுதியிருப்பதாகக் கூறி இயேசு சீஷர்களை நினைவுபடுத்தினவை எத்தனை காரியங்கள்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
View Comments
Best questions
please send the answer
Only question? Answer please
பதில் அனுப்பி வைக்கவும்
Plz answer this question
Please send answer
Please send the answers