வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்
  - திவ்ய வாசகன் என்பவர் யார்?
யோவான். வெளி 1:1
  - இயேசு கிறிஸ்து யாரை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார்?
தம்முடைய தூதன். வெளி 1:1
  - தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தவர் யார்?
யோவான். வெளி 1:2
  - யோவான் யாரை குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்?
இயேசு கிறிஸ்துவை. வெளி 1:2
  - எதை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் பாக்யவான்கள்?
வெளிப்படுத்தின தீர்க்கதரிசன வசனங்கள். வெளி 1:3
  - சமீபமாயிருப்பத எது?
காலம். வெளி 1:3
  - யோவான் எங்கே உள்ள சபைகளுக்கு கடிதம் எழுதினார்?
ஆசியா. வெளி 1:4
  - ஆசியாவில் இருந்த சபைகள் எத்தனை?
ஏழு. வெளி 1:4
  - உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கப்படுபவர் யார்?
இயேசு கிறிஸ்து. வெளி 1:5
  - மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவர் யார்?
இயேசு கிறிஸ்து. வெளி 1:5
  - யோவான் இருந்த தீவின் பெயர் என்ன?
பத்மு தீவு. வெளி 1:9
  - யோவான் எவைகளினிமித்தம் பத்மூ தீவில் இருந்தார்?
தேவவசனம், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி. வெளி 1:9
  - ஏழு சபையின் பெயர்கள் என்ன?
எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கியா. வெளி 1:11
  - மனுஷகுமாரனுக்கொப்பானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது?
இருபுறமும் கருக்குள்ள பட்டயம். வெளி 1:16
  - எவைகளின் இரகசியத்தை எழுதும் படி மனுஷகுமாரன் யோவானிடம் கூறினார்?
ஏழு நட்சத்திரங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். வெளி 1:20
  - ஏழு குத்து விளக்குகள் எதைக் குறிக்கும்?
ஏழு சபைகள். வெளி 1:20
  - ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது?
எபேசு. வெளி 2:4
  - எபேசு சபை எந்த மதஸ்தாரின் கிரியைகளை வெறுத்தது?
நிக்கொலாய். வெளி 2:6
  - தேவனுடைய பரதீசின் மத்தியிலிருப்பது எது?
ஜீவ விருட்சம். வெளி 2:7
  - ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்தையுடைய சபை எது?
சிமிர்னா. வெளி 2:9
  - மரணபரியந்தம் உண்மையாயிருப்பதால் கிடைப்பது என்ன?
ஜீவகிரீடம். வெளி 2:19
  - சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்த சபை எது ?
பெர்கமு. வெளி 2:13
  - சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில் உண்மையுள்ள சாட்ச்சியாயிருந்தவன் யார்?
அந்திப்பா. வெளி 2:13
  - யாருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் பெர்கமு சபையில் உள்ளனர்?
பிலேயாம். வெளி 2:14
  - ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எது புசிக்கக்கொடுக்கப்படும்?
மறைவான மன்னா. வெளி 2:17
  - வெண்மையான குறிகல்லில் எழுதப்பட்டிருப்பது என்ன?
புதிய நாமம். வெளி 2:17
  - தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லுகிற ஸ்திரீயானவள் யார்?
யேசபேல். வெளி 2:20
  - உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்ததாயிருந்த சபை எது?
சர்தை. வெளி 3:2
  - திருடனைப் போல கர்த்தர் எச்சபையின் மேல் வருவார்?
சர்தை சபை. வெளி 3:3
  - திறந்த வாசல் எச்சபையினருக்கு முன்பாக வைக்கப்படும்?
பிலதெல்பியா. வெளி 3:8
  - பூச்சக்கரத்தின் மீது வரும் சோதனை காலத்திற்குத் தப்பும் சபை எது?
பிலதெல்பியா. வெளி 3:10
  - தேவனுடைய நகரத்தின் நாமம் என்ன?
புதிய எருசலேம். வெளி 3:12
  - குளிருமல்ல அனலுமல்ல என்றழைக்கப்பட்ட சபை எது?
லவோதிக்கேயா. வெளி 3:15
  - யோவானோடே பேசின சத்தம் எதைப் போன்றது?
எக்காள சத்தம். வெளி 4:1
  - சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் பார்வைக்கு எவைகளுக்கு ஒப்பாயிருந்தார்?
வச்சிரக்கல், பதுமராகம். வெளி 4:3
  - சிங்காசனத்தை சுற்றியிருந்தது எது?
வானவில். வெளி 4:3
  - வானவில்லானது பார்வைக்கு எதைப்போல தோன்றியது?
மரகதம். வெளி 4:3
  - ஏழு அக்கினி தீபங்கள் என்பது எதைக் குறிக்கின்றது?
தேவனுடைய ஏழு ஆவிகள். வெளி 4;5
  - சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது எது?
கண்ணாடிக்கடல். வெளி 4:6
  - கண்ணாடிக்கடல் எதற்கு ஒப்பாயிருந்தது?
பளிங்கு. வெளி 4:6
  - சிங்காசனத்தின் மத்தியிலும் அதைச் சுற்றிலும் எத்தனை ஜீவன்களிருந்தன?
நான்கு. வெளி 4:6
  - முதலாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
சிங்கம். வெளி 4:7
  - இரண்டாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
காளை. வெளி 4:7
  - மூன்றாம் ஜீவன் எதைப்போன்ற முகமுள்ளதாயிருந்தது?
மனுஷ முகம். வெளி 4:7
  - நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது?
பறக்கிற கழுகு. வெளி 4:7
  - உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது??
ஏழு. வெளி 5:1
  - புஸ்தகம் யாரும் திறக்க பாத்திரவானாயிராததால் அழுதவர் யார்?
யோவான். வெளி 5: 4
  - தாவீதின் வேர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
இயேசு. வேளி 5:5
  - புஸ்தகத்தை திறப்பதற்கு ஜெயம் கொண்டவர் யார்?
இயேசு கிறிஸ்து. வெளி 5:5
  - தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலம் யாருடைய ஜெபங்களால் நிறைந்திருக்கிறது?
பரிசுத்தவான்கள். வெளி 5:8
  - நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடியவர்கள் யார்?
4 ஜீவன்களும் 24 மூப்பர்களும். வெளி 5:10
  - முதல் முத்திரையை உடைத்த போது யோவான் எதைக் கண்டார்?
வெள்ளைக் குதிரை. வெளி 6:1&2
  - வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?
ஒரு கிரீடம். வெளி 6:2
  - இரண்டாம் முத்திரையை உடைத்த போது புறப்பட்டது எது?
சிவப்புக் குதிரை. வெளி 6:4
  - சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து எதை எடுத்துப் போடும் படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது?
சமாதானம். வெளி 6:4
  - சிவப்புக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?
ஒரு பெரிய பட்டயம். வெளி 6:4
  - எவைகளை சேதப்படுத்தாதே என்ற சத்தத்தை யோவான் கேட்டார்?
எண்ணெய் திராட்சரசம். வெளி 6:6
  - மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பெயர் என்ன?
மரணம். வெளி 6:8
  - மரணம் என்பவனின் பின் சென்றது எது?
பாதாளம். வெளி 6:8
  - இரத்த சாட்சிகள் எதைக் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டார்கள்?
தங்கள் இரத்தம். வெளி 6:10
  - இரத்த சாட்சிகளுக்கு கொடுக்க பட்டது எது?
வெள்ளை அங்கிகள். வெளி 6:11
  - எந்த முத்திரை உடைக்கப்பட்டபோது பூமி மிகவும் அதிர்ந்தது?
ஆறாம் முத்திரை. வெளி 6:12
  - ஆறாம் முத்திரை உடைபட்ட போது சூரியன் எதைப்போல கறுத்தது?
கறுப்புக் கம்பளி. வெளி 6:12
  - ஆறாம் முத்திரை உடைபட்ட போது சந்திரன் எதைப் போலானது?
இரத்தம். வெளி 6:12
  - ஆறாம் முத்திரை உடைபட்ட போது பூமியில் விழுந்தவை எவை?
நட்சத்திரங்கள். வெளி 6:13
  - சுருட்டப்பட்ட புஸ்தகம் போல விலகிப்போனது எது?
வானம். வெளி 6:14
  - தங்கள் இடங்களை விட்டு அகன்று போனவை எவை?
மலைகள், தீவுகள். வெளி 6: 14
  - நான்கு திசையின் தூதர்கள் எதைப் பிடித்திருந்தார்கள்?
நான்கு காற்றுகள். வெளி 7:1
  - ஜீவனுள்ள தேவனுடைய வேறொரு தூதன் எங்கேயிருந்து ஏறி வந்தான்?
சூரியன் உதிக்குந்திசை. வெளி 7:2
  - சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறி வந்த தூதனின் கையில் இருந்தது என்ன?
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல். வெளி 7:2
  - யாருடைய நெற்றிகளில் முத்திரை போடுமட்டும் சேதமிருக்காது?
தேவனுடைய ஊழியக்காரர்கள். வெளி 7:3
  - இஸ்ரவேலரில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?
ஒரு லட்சத்திநாற்பத்திநாலாயிரம் பேர். வெளி 7:4
  - எண்ணக்கூடாத திரளான ஜனங்கள் எதை தரித்திருந்தார்கள்?
வெள்ளை அங்கி. வெளி 7:9
  - வெள்ளை அங்கிதரித்திருந்தோர் எதற்கு முன்பாக நின்றார்கள்?
சிங்காசனம். வெளி 7:9
  - வெள்ளை அங்கி தரித்திருந்தோர் யாருக்கு முன்பாக நின்றார்கள்?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:9
  - வெள்ளை அங்கித் தரித்தவர்கள் தங்கள் அங்கிகளை யாருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள் ?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:14
  - வெள்ளை அங்கி தரித்தவர்கள் எங்கே நடத்தப்படுவார்கள்?
ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு. வெளி 7:17
  - ஏழாம் முத்திரையை உடைத்த போது பரலோகத்தில் உண்டானது என்ன?
அமைதல். வெளி 8:1
  
 வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 8 – 14 Quiz கேள்வி பதில்
  - பரலோகத்தில் எவ்வளவு நேரம் அமைதல் உண்டாயிற்று?
ஏறக்குறைய அரைமணி நேரம். வெளி 8:1
  - ஏழாம் முத்திரையை உடைத்த போது எத்தனை தூதர்கள் வந்தார்கள்?
ஏழு. வெளி 8:2
  - ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
ஏழு எக்காளங்கள். வெளி 8:2
  - சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது என்ன?
பொற்பீடம். வெளி 8:3
  - சகலபரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும் படி தூதனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன?
மிகுந்த தூபவர்க்கம். வெளி 8:3
  - பலிபீடத்து நெருப்பினால் நிரப்பப்பட்டது எது?
தூபகலசம். வெளி 8:5
  - முதலாம் தூதன் எக்காளம் ஊதும் போது உண்டானவை எவை?
கல்மழையும் அக்கினியும். வெளி 8:7
  - எவைகளில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று?
கப்பல்கள். வெளி 8:9
  - தீவட்டியைப் போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது எது?
பெரிய நட்சத்திரம். வெளி 8:10
  - தீவட்டியைப் போல் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?
எட்டி. வெளி 8:11
  - ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது வானத்திலிருந்து விழுந்தது எது?
நட்சத்திரம். வெளி 9:1
  - பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது?
ஐந்தாம் தூதன். வெளி 9:1
  - பாதாளக்குழியின் புகையிலிருந்து எவைகள் புறப்பட்டு வந்தன?
வெட்டுக்கிளிகள். வெளி 9:3
  - வெட்டுக்கிளிகளுக்கு எதற்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது?
பூமியிலுள்ள தேள்களின் வல்லமை. வெளி 9:3
  - தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை சேதப்படுத்துவது எது?
வெட்டுக்கிளிகள். வெளி 9:4
  - வெட்டுக்கிளிகளுக்கு எவர்களைக் கொலை செய்ய உத்தரவு கொடுக்கப்படவில்லை?
நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர். வெளி 9:5
  - வெட்டுக்கிளிகள் எத்தனை மாதம் தங்கள் உத்தரவுகளை நிறைவேற்றும் ?
5 மாதம். வெளி 9:4&5
  - மனுஷர்கள் எதைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்?
சாவு. வெளி 9:6
  - மனுஷர்களுக்கு விலகி ஓடிப்போவது எது?
சாவு. வெளி 9:6
  - யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருப்பது எது?
வெட்டுக்கிளிகளின் உருவம். வெளி 9:7
  - வெட்டுக்கிளிகளின் தலைகளின் மேல் இருந்தது என்ன?
பொன்மயமான கிரீடம் போன்றவை. வெளி 9:7
  - வெட்டுக்கிளிகளின் முகங்கள் யாருடைய முகங்கள் போலிருந்தன?
மனுஷர். வெளி 9:7
  - எதனுடைய கூந்தல் ஸ்திரீகளின் கூந்தலைப் போலிருந்தது?
வெட்டுக்கிளிகள். வெளி 9:8
  - வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் இரைச்சல் எதன் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன?
இரதங்கள். வெளி 9:9
  - வெட்டுக்கிளிகளின் ராஜன் யார்?
பாதாளத்தின் தூதன். வெளி 9:11
  - எபிரேய பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?
அபெத்தோன். வெளி 9:11
  - கிரேக்க பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?
அப்பொல்லியோன். வெளி 9:11
  - எந்த நதியண்டையில் தூதர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்?
ஐபிராத்து. வெளி 9:14
  - எத்தனை தூதர்கள் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தார்கள்?
4 வெளி 9:14
  - மனுஷரில் எத்தனை பங்கைக் கொல்லும் படி தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?
மூன்றில் ஒரு பங்கு. வெளி 9:15
  - குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை எவ்வளவு?
இருபது கோடி. வெளி 9:16
  - எதனுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன?
குதிரைகள். வெளி 9:17
  - எதனுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன?
குதிரைகள். வெளி 9:17
  - குதிரைகளின் வால்கள் எவைகளுக்கு ஒப்பாயிருந்தன?
பாம்புகள். வெளி 9:19
  - காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை?
விக்கிரகங்கள். வெளி 9:20
  - பலமுள்ள தூதன் எங்கேயிருந்து இறங்கினான்?
வானம். வெளி 10:1
  - பலமுள்ள தூதனைச் சூழ்ந்திருந்தது எது?
மேகம். வெளி 10:1
  - பலமுள்ள தூதனின் முகம் எதைப்போலிருந்தது?
சூரியன். வெளி 10:1
  - பலமுள்ள தூதனின் கால்கள் எதைப்போலிருந்தது?
அக்கினி ஸ்தம்பங்கள். வெளி 10:1
  - பலமுள்ள தூதனின் கையில் இருந்தது என்ன?
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம். வெளி 10:2
  - சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தவன் யார்?
பலமுள்ள தூதன். வெளி 10:3
  - ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறுவது எது?
தேவரகசியம். வெளி 10:6
  - யார் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்?
ஏழாம் தூதன். வெளி 10:6
  - தேவன் யாருக்கு அறிவித்தபடி தேவரகசியம் நிறைவேறும்?
தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள். வெளி 10:6
  - பலமுள்ள தூதனிடமிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்தவர் யார்?
யோவான். வெளி 10:10
  - சிறுபுஸ்தகம் யோவானின் வாய்க்கு எப்படியிருந்தது?
தேனைப் போல மதுரமாய். வெளி 10:10
  - சிறுபுஸ்தகம் யோவானின் வயிற்றுக்கு எப்படியிருந்தது?
கசப்பாய். வெளி 10:10
  - யோவானிடம் எதற்கு ஒப்பான அளவு கோல் கொடுக்கப்பட்டது?
கைக்கோல். வெளி 11:1
  - ஆலயத்திற்கு புறம்பான பிரகாரம் யாருடையது?
புறஜாதியார். வெளி 11:2
  - பரிசுத்தநகரத்தை மிதிப்பவர்கள் யார்?
புறஜாதியார். வெளி 11:2
  - பரிசுத்தநகரத்தை புறஜாதியார் எத்தனை மாதம் மிதிப்பார்கள்?
42 மாதம். வெளி 11:2
  - இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய் தீர்க்கதரிசனம் சொல்பவர்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:3
  - இரண்டு சாட்சிகள் எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்?
1260 நாட்கள். வெளி 11:4
  - பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:4
  - இரண்டு விளக்கு தண்டுகள் என்பது யாரைக் குறிக்கின்றது?
இரண்டு சாட்சிகள். வெளி 11:4
  - இரண்டு சாட்சிகளின் வாயிலிருந்து புறப்பட்டு சத்துருக்களைப் பட்சிப்பது எது?
அக்கினி. வெளி 11:5
  - மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
  - தண்ணீரை இரத்தமாக மாற்ற அதிகாரம் பெற்றவர்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
  - பூமியை சகலவித வாதைகளாலும் வாதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
  - இரண்டு சாட்சிகளோடே யுத்தம் பண்ணுவது எது?
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7
  - இரண்டு சாட்சிகளைப் கொன்று போடுவது எது?
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7
  - மகா நகரத்தின் விசாலமான வீதியில் கிடப்பது எது?
இரண்டு சாட்சிகளின் உடல்கள். வெளி 11:8
  - இரண்டு சாட்சிகளின் உடல்கள் கிடக்கும் இடம் எது?
சோதோம், எகிப்து. வெளி 11:8
  - ஞானார்த்தமாய் சொல்லப்படும் நகரங்கள் எவை?
சோதோம், எகிப்து. வெளி 11:8
  - நம்முடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
சோதோம், எகிப்து. வெளி 11:8
  - இரண்டு சாட்சிகளின் உடல்கள் எத்தனை நாள் வீதியில் கிடக்கும்?
3/2 நாள். வெளி 11:9
  - யாருடைய உடல்களை கல்லறையில் வைக்கவொட்டார்கள்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:10
  - பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினவர்கள் யார்?
இரண்டு சாட்சிகள். வெளி 11:10
  - இரண்டு சாட்சிகளின் மரணத்தினிமித்தம் ஒருவருக்கொருவர் எதை அனுப்புவார்கள்?
வெகுமதிகள். வெளி 11:10
  - மூன்றரை நாளுக்குப்பின் இரண்டு சாட்சிகளின் உடல்களில் பிரவேசித்தது எது?
ஜீவ ஆவி. வெளி 11:11
  - சோதோம் நகரத்தில் எத்தனை பங்கு இடிந்து விழுந்தது?
பத்தில் ஒன்று. வெளி 11:13
  - சோதோமில் பூமி யதிர்ச்சியினால் எத்தனை மனுஷர்கள் அழிந்தார்கள்?
7,000 பேர். வெளி 11:13
  - ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய போது கர்த்தருக்கும் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களானவை எவை?
உலகத்தின் ராஜ்யங்கள். வெளி 11:15
  - தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த எவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்?
24 மூப்பர்கள். வெளி 11:16
  - யார் நியாயத்தீர்ப்படைகிறதற்குக் காலம் வந்தது?
மரித்தோர். வெளி 11:18
  - எவர்களுக்குப் பலனளிக்கிறதற்குக் காலம் வந்தது?
தேவனுடைய ஊழியக்காரர், பரிசுத்தவான்கள், பயபக்தியாயிருந்த சிறியோர், பெரியோர். வெளி 11:18
  - தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எது?
பரலோகத்தில். வெளி 11:19
  - தேவனுடைய ஆலயத்தில் காணப்பட்டது எது?
உடன்படிக்கையின் பெட்டி. வெளி 11:19
  - சூரியனை அணிந்திருந்தவள் யார்?
ஒரு ஸ்திரீ. வெளி 12:1
  - ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன?
சந்திரன். வெளி 12:1
  - ஸ்திரீயின் சிரசின் மேல் இருந்தது என்ன?
கிரீடம். வெளி 12:1
  - ஸ்திரீயின் சிரசின் மேல் எத்தனை நட்சத்திரமுள்ள கிரீடம் இருந்தது?
12 வெளி 12:1
  - பிரசவ வேதனை யடைந்தவள் யார்?
சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:2
  - ஸ்திரீ பிரசவவேதனையடைந்து அலறியபோது வானத்தில் தோன்றிய வேறொரு அடையாளம் என்ன?
வலுசர்ப்பம். வெளி 12:3
  - வலுசர்ப்பத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன?
7 தலைகள். வெளி 12:3
  - வலுசர்ப்பத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
பத்து. வெளி 12:3
  - வலுசர்ப்பத்தின் தலையின் மேல் எத்தனை முடிகள் இருந்தன?
ஏழு. வெளி 12:3
  - ஏழு தலைகளையுடைய வலுசர்ப்பத்தின் நிறம் என்ன?
சிவப்பு. வெளி 12:3
  - வலுசர்ப்பத்தின் எப்பகுதி நட்சத்திரங்களை விழத்தள்ளியது?
வால். வெளி 12:4
  - வலுசர்ப்பத்தினால் எத்தனை பங்கு நட்சத்திரங்கள் பூமியில் விழத்தள்ளப்பட்டது?
மூன்றில் ஒரு பங்கு. வெளி 12:4
  - பிறந்த குழந்தையை பட்சித்து போடும் படி நின்றது எது?
வலுசர்ப்பம். வெளி 12:4
  - ஸ்திரீயானவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தாள்?
ஆண் குழந்தை. வெளி 12:5
  - தேவனிடத்திற்கும் சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது எது?
ஆண் குழந்தை. வெளி 12:5
  - ஸ்திரீயானவள் எங்கே ஓடிப்போனாள்?
வனாந்தரம். வெளி 12:6
  - வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டவள் யார்?
சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:6
  - ஸ்திரீயானவள் எத்தனை நாள் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டாள்?
1260 நாள். வெளி 12:6
  - யுத்தம் உண்டானது எங்கே?
வானம். வெளி 12:7
  - வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினவர்கள் யார்?
மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும். வெளி 12:7
  - உலகமனத்தையும் மோசம்போக்குகிறது யார்?
சாத்தான். வெளி 12:9
  - பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டது எது?
வலுசர்ப்பம். வெளி 12:9
  - பழைய பாம்பு என்று அழைக்கப்பட்டது எது?
வலுசர்ப்பம். வெளி 12:9
  - பூமியிலே விழத்தள்ளப்பட்டது எது?
வலுசர்ப்பம். வெளி 12:9
  - வலுசர்ப்பத்தோடே பூமியிலே விழத்தள்ளப்பட்டவர்கள் யார்?
அதைச் சேர்ந்த தூதர். வெளி 12:9
  - எவைகள் உண்டாயிருக்கிறது என்று வானத்திலுண்டான சத்தம் கூறியது?
இரட்சிப்பு, வல்லமை, தேவனுடைய ராஜ்யம், கிறிஸ்துவின் அதிகாரம். வெளி 12:10
  - யார் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த்தப்பட்டுப் போனான்?
சகோதரர். வெளி 12:10
  - சகோதரர் மரணத்துக்குத் தப்பும் படி எவைகளினால் பிசாசை ஜெயித்தார்கள்?
ஆட்டுக்குட்டியின் இரத்தம், தங்கள் சாட்சியின் வசனம். வெளி 12:11
  - யாருக்குக் கொஞ்ச காலம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது?
பிசாசானவன். வெளி 12:12
  - ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தியது எது?
வலுசர்ப்பம். வெளி 12:13
  - பெருங்கழுகின் சிறகுகள் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
ஸ்திரீ. வெளி 12:14
  - வலுசர்ப்பத்திற்கு விலகி வனாந்தரத்திற்குச் சென்றவள் யார்?
ஸ்திரீ. வெளி 12:14
  - ஸ்திரீயானவள் எத்தனை காலங்கள் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திற்குப் போனாள்?
ஒரு காலம், காலங்கள், அரைகாலம். வெளி 12:14
  - ஸ்திரீயை வெள்ளத்தால் அழிக்கும் படி முயற்சித்தது எது?
வலுசர்ப்பம். வெளி 12:15
  - ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டது எது?
வலுசர்ப்பம். வெளி 12:17
  - ஸ்திரீயின் சந்ததியாரோடு யுத்தம் பண்ணச் சென்றது எது ?
வலுசர்ப்பம். வெளி 12:17
  - ஸ்திரீயின் சந்ததியார் எதைக் கைக்கொண்டார்கள்?
தேவனுடைய கற்பனைகள். வெளி 12:17
  - ஸ்திரீயின் சந்ததியார் யாரைக் குறித்த சாட்சியை உடையவர்கள்?
இயேசு கிறிஸ்து. வெளி 12:17
  - கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டிருந்தவர் யார்?
யோவான். வெளி 13:1
  - சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன?
மிருகம். வெளி 13:1
  - சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன?
ஏழு. வெளி 13:1
  - சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
பத்து. வெளி 13:1
  - சமுத்திரத்து கொம்புகள் மேல் இருந்தது என்ன?
10 முடிகள். வெளி 13:1
  - சமுத்திரத்து மிருகத்தின் தலைகளின் மேல் இருந்தது என்ன?
தூஷணமான நாமம். வெளி 13:1
  - சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தை போலிருந்தது?
சிறுத்தை. வெளி 13:2
  - சமுத்திரத்து மிருகத்தின் கால்கள் எதைப்போலிருந்தன?
கரடியின் கால்கள். வெளி 13:2
  - சிங்கத்தின் வாயை உடைய மிருகம் எது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:2
  - சமுத்திரத்து மிருகத்துக்கு தன் சிங்காசனத்தைக் கொடுத்தது எது?
வலுசர்ப்பம். வெளி 13:2
  - தன் பலத்தையும் அதிகாரத்தையும் வலுசர்ப்பம் எதற்குக் கொடுத்தது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:2
  - எதினுடைய தலைகளிலொன்று சாவுக்கேதுவான காயமுண்டாயிருந்தது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:3
  - பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே எதைப் பின்பற்றினார்கள்?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:3
  - பூமியிலுள்ள ஜனங்கள் எவைகளை வணங்கினார்கள்?
வலுசர்ப்பம், சமுத்திரத்து மிருகம். வெளி 13:4
  - சமுத்திரத்து மிருகத்துக்கு எவைகளை பேசும் வாய் கொடுக்கப்பட்டது?
பெருமையானவைகள், தூஷணங்கள். வெளி 13:5
  - சமுத்திரத்து மிருகத்துக்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது?
42 மாதம். வெளி 13:5
  - சமுத்திரத்து மிருகம் யாரை தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்தது?
தேவனை. வெளி 13:6
  - தேவனுடைய நாமத்தையும் அவருடைய வாசஸ்தலத்தையும் தூஷித்தது எது?
சமுத்திரத்து மிருகம்
  - சமுத்திரத்து மிருகம் எங்கே வாசமாயிருக்கிறவர்களைத் தூஷித்தது?
பரலோகத்தில். வெளி 13:6
  - சமுத்திரத்து மிருகத்துக்கு எவர்களை ஜெயிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது?
பரிசுத்தவான்கள். வெளி 13:7
  - எதில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?
ஜீவபுஸ்தகம். வெளி 13:8
  - எதுமுதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்?
உலகத்தோற்றம். வெளி 13:8
  - பட்டயத்தினாலே கொல்லுகிறவன் எதினாலே கொல்லப்பட வேண்டும்?
பட்டயம். வெளி 13:10
  - யாருடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது?
பரிசுத்தவான்கள். வெளி 13:10
  - வெறொரு மிருகம் எங்கேயிருந்து எழும்பினது?
பூமி. வெளி 13:11
  - பூமியிலிருந்து எழும்பின மிருகத்திற்கு எத்தனை கொம்புகளிருந்தன?
இரண்டு. வெளி 13:11
  - பூமியிலிருந்தெழும்பின மிருகத்தின் கொம்புகள் எதற்கு ஒப்பாயிருந்தன?
ஆட்டுக்குட்டி. வெளி 13:11
  - பூமியிலிருந்தெழும்பின மிருகம் எதைப்போல பேசியது?
வலுசர்ப்பம். வெளி 13:11
  - சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்திருந்தது எது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:12
  - பட்டயத்தினாலே காயப்பட்டு பிழைத்தது எது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:14
  - எந்த மிருகத்தின் சொரூபம் பேசியது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:15
  - எந்த சொரூபத்தை வணங்காத யாவரும் கொலை செய்யப்படுவார்கள்?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:15
  - எதினுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டது?
சமுத்திரத்து மிருகம். வெளி 13:17
  - எதிலே ஞானம் விளங்குவதாக கூறப்படுகிறது?
மிருகத்தின் இலக்கம். வெளி 13:18
  - மிருகத்தின் இலக்கத்தை எவன் கணக்கு பார்க்கக்கடவன்?
புத்தியுள்ளவன். வெளி 13:18
  - மிருகத்தின் இலக்கம் யாருடைய இலக்கமாயிருக்கிறது?
மனுஷன். வெளி 13:18
  - மிருகத்தின் இலக்கம் என்ன?
666 வெளி 13:18
  - ஆட்டுக்குட்டியானவர் எந்த மலையில் நின்றதாக யோவான் கண்டார்?
சீயோன் மலை. வெளி 14:1
  - பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்தவர்கள் எத்தனை பேர்?
1,44,000 பேர். வெளி 14:1
  - இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் எம்மலையில் நின்றிருந்தார்கள்?
சீயோன் மலை. வெளி 14:1
  - பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்த இடம் எது?
நெற்றி. வெளி 14:1
  - பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் யாரோடே கூட நின்றார்கள்?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 14:1
  - பெருவெள்ள இரைச்சல் போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது?
வானம். வெளி 14:2
  - சிங்காசனத்திற்கு முன்பாக புதுப்பாட்டை பாடியவர்கள் யார்?
சுரமண்டலக்காரர். வெளி 14:3
  - சுரமண்டலக்காரரின் பாடல் யார் மட்டும் கற்று கொள்ள கூடியதாயிருந்தது?
1,44,000 பேர். வெளி 14:3
  - 1,44,000 பேர் எங்கேயிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்?
பூமி. வெளி 14:3
  - ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் யார்?
மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4
  - ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றியவர்கள் யார்?
மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4
  - மனுஷரினின்று முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?
1,44,000 பேர். வெளி 14:4
  - மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் யாருக்கு முதற்பலனாக காணப்பட்டார்கள்?
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும். வெளி 14:4
  - மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் வாயில் எது காணப்படவில்லை?
கபடம். வெளி 14:5
  - எந்த மகாநகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்?
பாபிலோன். வெளி 14:8
  - தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் யார்?
பாபிலோன். வெளி 14:8
  - தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்டது எது?
தேவனுடைய உக்கிரமாகிய மது. வெளி 14:10
  - அக்கினியாலும் கந்தகத்தாலும் வாதிக்கப்படுபவர்கள் யார்?
மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள். வெளி 14:10
  - எதின் சொரூபத்தை வணங்கினவர்களுக்கு இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமற் போகும்?
மிருகம். வெளி 14:11
  - தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்கிறவர்கள் யார்?
பரிசுத்தவான்கள். வெளி 14:12
  - பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?
பொறுமை. வெளி 14:12
  - கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் எதைவிட்டொழிந்து இளைப்பாறுவார்கள்?
தங்கள் பிரயாசங்கள். வெளி 14:13
  - கர்த்தருக்குள் மரிக்கிறவர்களோடே கூடப்போவது என்ன?
கிரியைகள். வெளி 14:13
  - ஆம் என்று திருவுளம் பற்றுகிறவர் யார்?
ஆவியானவர். வெளி 14:13
  - மனுஷகுமாரனுக்கொப்பானவர் எதின் மேல் உட்கார்ந்திருந்தார்?
மேகம். வெளி 14:14
  - மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது சிரசின் மேல் எதை வைத்திருந்தார்?
பொற்கிரீடம். வெளி 14:14
  - மனுஷகுமாரனுக்கொப்பானவர் கையில் வைத்திருந்தது என்ன?
கருக்குள்ள அரிவாள். வெளி 14:14
  - எதின் பயிர் முதிர்ந்தது என்று தூதன் கூறினான்?
பூமி. வெளி 14:15
  - கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?
பரலோகத்திலுள்ள தேவாலயம். வெளி 14:1
  - அக்கினியின் மேல் அதிகாரமுள்ள தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?
பலிபீடம். வெளி 14:17
  - கருக்குள்ள அரிவாளால் பூமியின் எப்பழங்கள் அறுக்கப்பட்டன?
திராட்சப்பழங்கள். வெளி 14:19
  - திராட்சப்பழங்கள் தேவனுடைய எந்த ஆலையில் போடப்பட்டது?
கோபாக்கினை. வெளி 14:19
  - தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலை எங்கே இருந்தது?
நகரத்திற்கு புறம்பே. வெளி 14:20
  - நகரத்திற்கு புறம்பே உள்ள ஆலையில் மிதிக்கப்பட்டது என்ன?
திராட்சைப் பழங்கள். வெளி 14:20
  - தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையிலிருந்து புறப்பட்டு வந்தது என்ன?
இரத்தம். வெளி 14:20
  - ஆலையிலிருந்து இரத்தம் எவ்வளவு தூரம் புறப்பட்டு சென்றது?
1600 ஸ்தாதி. வெளி 14:20
  - குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது என்ன?
இரத்தம். வெளி 14:20
  - எவைகளுடைய ஏழு தூதரை யோவான் வானத்திலே கண்டார்?
ஏழு வாதைகள். வெளி 15:1
  
 வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 15 – 21 Quiz கேள்வி பதில்
  - கண்ணாடிக்கடலில் கலந்திருந்தது என்ன?
அக்கினி. வெளி 15:2
  - கண்ணாடிக்கடலருகே நின்றிருந்தவர்கள் யார்?
ஜெயங்கொண்டவர்கள். வெளி 15:2
  - ஜெயங்கொண்டவர்கள் எதைப்பிடித்துக் கொண்டு கண்ணாடிக்கடலருகே நின்றார்கள்?
தேவசுரமண்டலங்கள். வெளி 15:2
  - தேவனுடைய ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?
மோசே. வெளி 15:3
  - ஜெயங்கொண்டவர்கள் எவர்களுடைய பாட்டைப் பாடுவார்கள்?
மோசே, ஆட்டுக்குட்டியானவர். வெளி 15:3
  - எது வெளியரங்கமாயின?
தேவனுடைய நீதியான செயல்கள். வெளி 15:4
  - பரலோகத்திலே காணப்படும் ஆலயம் என்பது எது?
சாட்சியின் கூடாரம். வெளி 15:5
  - ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள்?
ஆலயம். வெளி 15:6
  - சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் தரித்திருந்தவர்கள் யார்?
ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள். வெளி 15:6
  - தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்திருந்தவை எவை?
பொற்கலசங்கள். வெளி 15:7
  - தேவனுடைய மகிமையினாலும் வல்லமையினாலுமா உண்டானது எது?
புகை. வெளி 15:8
  - தேவனுடைய வல்லமையினால் உண்டான புகையால் நிறைந்தது எது?
தேவாலயம். வெளி 15:8
  - தேவனுடைய கோபகலசங்களை உடைய தூதர்கள் எத்தனை பேர்?
ஏழு தூதர்கள். வெளி 16:1
  - தேவனுடைய கோபகலசங்களை எங்கே ஊற்றும்படி தூதர்களிடம் கூறப்பட்டது?
பூமியின் மேல். வெளி 16:1
  - முதலாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
பூமி. வெளி 10:2
  - முதலாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?
பொல்லாத கொடிய புண். வெளி 16:2
  - இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
சமுத்திரம். வெளி 16:3
  - இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற அது எதைப் போலாயிற்று?
செத்தவனுடைய இரத்தம். வெளி 16:3
  - மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
ஆறுகள், நீருற்றுகள். வெளி 16:4
  - மூன்றாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது?
இரத்தம். வெளி 16:4
  - இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?
தண்ணீர்களின் தூதன். வெளி 16:5
  - இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்?
தண்ணீர்களின் தூதன். வெளி 16:5
  - மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருடைய இரத்தத்தைச் சிந்தியவர்கள்?
பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள். வெளி 26:6
  - மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு தேவன் எதை குடிக்க கொடுத்தார்?
இரத்தம். வெளி 16:6
  - சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?
தேவனுடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 16:7
  - நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
சூரியன். வெளி 16:8
  - ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
ஐபிராத் நதி. வெளி 16:12
  - சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருபவர்கள் யார்?
ராஜாக்கள். வெளி 16:12
  - யாருக்கு வழி ஆயத்தமாகும்படி ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போனது?
ராஜாக்கள். வெளி 16:12
  - வலுசர்ப்பம் மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து வந்தது என்ன?
அசுத்த ஆவிகள். வெளி 16:13
  - மூன்று அசுத்த ஆவிகளும் எதற்கு ஒப்பாக காணப்பட்டது?
தவளைகள். வெளி 16:13
  - பிசாசுகளின் ஆவிகள் எதைச் செய்தன?
அற்புதங்கள். வெளி 16:14
  - சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடப்பது என்ன?
யுத்தம். வெளி 16:14
  - பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைக் கூட்டிச் சேர்க்கும்படி சென்றது யார்?
பிசாசுகளின் ஆவிகள். வெளி16:14
  - இதோ திருடனைப் போல் வருகிறேன் என்ற சத்தம் எங்கேயிருந்து உண்டானது?
தேவாலயம். வெளி 16 :1-15
  - நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு எதைக் காத்து கொள்ள வேண்டும்?
வஸ்திரங்களை. வெளி 16:15
  - பூமியின் ராஜாக்கள் எந்த இடத்திலே கூட்டி சேர்க்கப்பட்டார்கள்?
அர்மகெதோன். வெளி 16:16
  - அர்மகெதோன் என்பது எந்த பாஷையில் அழைக்கப்பட்டுள்ளது?
எபிரெயு. வெளி 16:16
  - ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்?
ஆகாயம். வெளி 16:17
  - ஏழாம் தூதன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது பிறந்த பெருஞ்சத்தம் என்ன?
ஆயிற்று. வெளி 16:17
  - ஆயிற்று என்கிற சத்தம் எங்கேயுள்ள சிங்காசனத்திலிருந்து பிறந்தது?
பரலோகத்தின் ஆலயம். வெளி 16;17
  - எந்த தூதன் கலசத்தை ஊற்றியபோது சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது?
ஏழாம் தூதன். வெளி 16:18
  - மகா நகரம் எத்தனை பங்காக பிரிக்கப்பட்டது?
மூன்று. வெளி 16:19
  - தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரம் யாருக்கு கொடுக்கப்பட்டது?
மகாபாபிலோன். வெளி 16:19
  - ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் அகன்று போனவை எவை?
தீவுகள். வெளி 16:20
  - ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் காணப்படாமல் போனவை எவை?
பர்வதங்கள். வெளி 16:20
  - பெரிய கல்மழை எங்கேயிருந்து மனுஷர் மேல் விழுந்தது?
வானம். வெளி 16:21
  - எதன் நிறையான கல்மழை வானத்திலிருந்து விழுந்தது?
தாலந்து. வெளி 16:20
  - மகா கொடியதாயிருந்த வாதை எது?
ஏழாம் வாதை. வெளி 16:21
  - திரளான தண்ணீர்கள் மேல் உட்காந்திருந்தவள் யார்?
மகா வேசி. வெளி 17:1
  - மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்?
பூமியின் ராஜாக்கள். வெளி 17:1
  - ஆவிக்குள் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டவர் யார்?
யோவான். வெளி 17:3
  - யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன?
ஏழு. வெளி 17:3
  - யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
10 வெளி 17:3
  - யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகம் எப்படிப்பட்ட நாமங்களால் நிறைந்தது?
தூஷணமான. வெளி 17:3
  - தூஷணமான நாமங்களால் நிறைந்த மிருகத்தின் நிறம் என்ன?
சிவப்பு. வெளி 17:3
  - ஏழு தலையும் பத்து கொம்புகளையும் உடைய மிருகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்?
ஒரு ஸ்திரீ. வெளி 17:3
  - இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடையைத் தரித்திருந்தவள் யார்?
மகா வேசி. வெளி 17:4
  - பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களாலும் சிங்கரிக்கப்பட்டிருந்தவள் யார்?
மகா வேசி. வெளி 17:4
  - மகா வேசி தன் கையால் எதை பிடித்திருந்தாள்?
பொற்பாத்திரம். வெளி 17:4
  - மகா வேசியின் பொற்பாத்திரம் எதினால் நிறைந்திருந்தது?
வேசித்தனமாகிய அருவருப்புகளும், அசுத்தங்களும். வெளி 17:4
  - இரகசியம் என்ற பதம் யாருடைய நெற்றியில் எழுதியிருந்தது?
மகா வேசி. வெளி 17:5
  - மகா பாபிலோன் என்பது யாரைக் குறிக்கிறது?
மகா வேசி. வெளி 17:5
  - வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் எது?
மகாபாபிலோன். வெளி 17:5
  - மகாவேசியின் நெற்றியில் எத்தனை நாமங்கள் எழுதப்பட்டிருந்தன?
மூன்று. வெளி 17:5
  - பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்ச்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருந்தவள் யார்?
மகா வேசி. வெளி 17:6
  - மகா வேசியைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?
யோவான். வெளி 17:6
  - ஏன் ஆச்சரியப்படுகிறாய் யார் யாரிடம் கேட்டது?
தூதன் யோவானிடம். வெளி 17:7
  - எவைகளின் இரகசியத்தை யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்?
ஸ்திரீ மற்றும் அவளைச் சுமக்கிற மிருகம். வெளி 17:7
  - பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப்போவது எது?
யோவான் கண்ட மிருகம். வெளி 17:7
  - இருந்தும் இராமற்போனதும் இனி இருப்பதுமாயிருப்பது எது?
யோவான் கண்ட மிருகம். வெளி 17:8
  - மிருகத்தின் இரகசியத்தில் விளங்குவது எது?
ஞானமுள்ள மனம். வெளி 17:9
  - ஏழு தலைகளையுடைய மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றது?
ஏழு மலைகள். வெளி 17:9
  - ஏழு மலைகளும் யார் உட்கார்ந்திருக்கிற மலைகளைக் குறிக்கிறது?
மகா வேசி. வெளி 17:9
  - ஏழு மலைகள் என்பது யாரைக் குறிக்கிறது?
ஏழு ராஜாக்கள். வெளி 17:10
  - ஏழு ராஜாக்களில் விழுந்தவர் எத்தனை பேர்?
ஐந்து. வெளி 17:10
  - ஏழு ராஜாக்களில் இன்னும் வராதவர்கள் எத்தனை பேர்?
ஒருவன். வெளி 17:10
  - கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டியவன் யார்?
இன்னும் வராத ஒரு ராஜா. வெளி 17:10
  - எட்டாவதானாயிருப்பது எது?
இருந்ததும் இராததுமாகிய மிருகம். வெளி 17:11
  - இருந்ததும் இராததுமாயிருக்கிற மிருகம் எதிலிருந்து தோன்றுகிறதாயிருக்கும்?
ஏழிலிருந்து. வெளி 17:11
  - நாசமடைய போகிறவனாயிருப்பவன் யார்?
எட்டாவதான ராஜா. வெளி 17:11
  - பத்து கொம்புகள் என்பது யாரைக் குறிக்கும்?
10 ராஜாக்கள். வெளி 17:12
  - மிருகத்தின் கொம்புகள் குறிக்கும் ராஜாக்கள் இன்னும் பெறாதது எது?
இராஜ்யம். வெளி 17:12
  - மிருகத்துடனே கூட ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் யார்?
10 ராஜாக்கள். வெளி 17:13
  - 10 ராஜாக்களும் எவ்வளவு நேரமளவும் அதிகாரம் பெற்றுக் கொள்ளுவார்கள்?
ஒருமணி நேரம். வெளி 17:12
  - ஒரே யோசனையுள்ளவர்கள் யார்?
10 ராஜாக்கள். வெளி 17:13
  - தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்துக்குக் கொடுப்பவர்கள் யார்?
10 ராஜாக்கள். வெளி 17:13
  - பத்து ராஜாக்களும் யாருடனே யுத்தம் பண்ணுவார்கள்?
ஆட்டுக்குட்டியானவர். வெளி17:14
  - 10 ராஜாக்களை யுத்தத்தில் ஜெயிப்பவர் யார்?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 17:14
  - ஆட்டுக்குட்டியானவரோடே இருக்கிறவர்கள்எப்படிப்பட்டவர்கள்?
அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமானவர்கள். வெளி 17:14
  - வேசி உட்கார்ந்திருந்த தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டவர்கள் யார்?
ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர். வெளி 17:15
  - பத்து ராஜாக்களும் யாரைப் பகைப்பார்கள்?
வேசி. வெளி 17:16
  - வேசியைப் பாழும் நிர்வாணமுமாக்குபவர்கள் யார்?
பத்து ராஜாக்கள். வெளி 17:16
  - பத்து ராஜாக்களும் வேசியினுடைய எதைப் பட்சிப்பார்கள்?
மாம்சத்தை. வெளி 17:16
  - வேசியை நெருப்பினால் சுட்டெரிப்பவர்கள் யார்?
பத்து ராஜாக்கள். வெளி 17:16
  - யார் தங்கள் இருதயத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்?
பத்து ராஜாக்கள். வெளி 17:17
  - பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் யார்?
மகா வேசி. வெளி 17:18
  - வெறொரு தூதன் எதை உடையவனாய் வானத்திலிருந்து இறங்கி வந்தான்?
மிகுந்த அதிகாரம். வெளி 18:1
  - மிகுந்த அதிகாரமுடைய தூதனால் பிரகாசமானது எது?
பூமி. வெளி 18:1
  - எந்த நகரம் விழுந்தது விழுந்தது என்று தூதன் சத்தமிட்டான்?
மகா பாபிலோன். வெளி 18:2
  - பேய்களுடைய குடியிருப்பு என்பது எது?
மகாபாபிலோன். வெளி 18:2
  - அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளின் கூடு எது?
மகாபாபிலோன். வெளி 18:2
  - மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்?
பூமியின் ராஜாக்கள். வெளி 18:3
  - மகா வேசியின் செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?
பூமியின் வர்த்தகர். வெளி 18:3
  - யாருடைய பாவம் வானபரியந்தம் எட்டியது?
மகா வேசி. வெளி 18:5
  - யாருடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்?
மகா வேசி. வெளி 18:5
  - தன்னை மகிமைப்படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்தவள் யார்?
மகா வேசி. வெளி 18:7
  - நான் ரஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்று எண்ணியவள் யார்?
மகா பாபிலோன். வெளி 18:7
  - ஒரே நாழிகையில் சாவும் துக்கமும் பஞ்சமும் யாருக்கு வரும்?
மகா பாபிலோன். வெளி 18:8
  - மகா பாபிலோன் வேகிறதினால் அழுது புலம்புவர்கள் யார்?
பூமியின் ராஜாக்கள். வெளி 18:9
  - பூமியின் வர்த்தகர்கள் யாருக்காக அழுது புலம்புவார்கள்?
மகா பாபிலோன். வெளி 18:11-13
  - தங்கள் சரக்குகளை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புவர்கள் யார்?
பூமியின் வர்த்தகர்கள். வெளி 18:11-13
  - எது இச்சித்த பழவர்க்கங்கள் அதை விட்டு நீங்கிப்போயின?
மகா பாபிலோனின் ஆத்துமா. வெளி 18:14
  - ஒரே நாளிகையிலே யாருடைய அவ்வளவு ஐசுவரியமும் அழிந்து போனது?
மகாபாபிலோன். வெளி 18:16
  - எவர்கள் தங்கள் தலைகளில் புழுதியைய் போட்டுக்கொண்டார்கள்?
மாலுமிகள். வெளி 18:19
  - மகா பாபிலோனின் உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்?
சமுத்திரத்தில் கப்பல்களையுடைய அனைவரும். வெளி 18:19
  - ஒரு நாழிகையிலே பாழாய்ப் போனவள் யார்?
மகா பாபிலோன். வெளி 18: 19
  - மகா பாபிலோனுக்காக அழுது துக்கித்து ஓலமிடுபவர்கள் யார்?
மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பலாட்கள் சமுத்திரத்தில் தொழில் செய்பவர்கள். வெளி 18:17-19
  - பரலோகம் யாரைக் குறித்து களிகூரவேண்டும் என்று தூதன் கூறினான்?
மகா பாபிலோன். வெளி 18:20
  - எந்த மகா நகரம் இனி ஒருபோதும் காணப்படாமற் போகும்?
மகா பாபிலோன். வெளி 18:21
  - தூதன் பெரிய எந்திரகல்லையொத்ததை எங்கே எறிந்தான்?
சமுத்திரத்தில். வெளி 18:21
  - எவர்களுடைய சத்தம் இனி மகாபாபிலோனில் கேட்கப்படுவதில்லை?
சுரமண்டலக்காரர், கீதவாத்தியக்காரர், நாகசுரக்காரர், எக்காளக்காரர். வெளி 18:22
  - எந்தத் தொழிலாளியும் இனி யாரிடத்தில் காணப்படுவதில்லை?
மகா பாபிலோன். வெளி 18:22
  - மகா பாபிலோனில் இனி பிரகாசியாமலிருப்பது எது?
விளக்கு வெளிச்சம். வெளி 18:23
  - மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி எங்கே கேட்கப்படுவதில்லை?
மகா பாபிலோன். வெளி 18:23
  - மகா பாபிலோனின் வர்த்தகர் எங்கே பெரியோர்களாயிருந்தார்கள்?
பூமியில். வெளி 18:23
  - யாருடைய சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்கள்?
மகா பாபிலோன். வெளி 18:23
  - தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?
மகா பாபிலோன். வெளி 18:24
  - பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது?
மகா பாபிலோன். வெளி 18:24
  - எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்?
பரலோகம். வெளி 19:1
  - பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்ட வார்த்தை எது?
அல்லேலூயா. வெளி 19:1
  - இரட்சணியம், மகிமை, கனம், வல்லமை இவைகள் யாருக்குரியவைகள்?
தேவனாகிய கர்த்தர். வெளி 19:1
  - சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 19:1
  - மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்?
பூமியை. வெளி 19:2
  - மகா வேசிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தவர் யார்?
தேவனாகிய கர்த்தர். வெளி 19:2
  - தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்?
தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2
  - யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார்கள்?
மகா வேசி. வெளி 19:3
  - வணக்கமாய் விழுந்து ஆமென் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்?
24 மூப்பர்களும், 4 ஜீவன்கள்ளும். வெளி 19:4
  - தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது?
சிங்காசனம். வெளி 19:5
  - யாருடைய கலியாணம் வந்தது?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 19: 7
  - ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குத் தன்னை ஆயத்தம் பண்ணியவள் யார்?
ஆட்டுக்குட்டியானவரின் மனைவி. வெளி 19:7
  - எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்?
பரலோகம். வெளி 19:1
  - பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்டு வார்த்தை எது?
அல்லேலூயா. வெளி 19:1
  - சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்?
கர்த்தருடைய நீயாயத்தீர்ப்புகள். வெளி 19:1
  - மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்?
பூமியை. வெளி 19:2
  - மகாவேசிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்தவர் யார்?
தேவனாகிய கர்த்தர். வெளி 19:2
  - தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்?
தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2
  - யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார் கள்?
மகா வேசி. வெளி 19:3
  - வணக்கமாய் விழுந்து ஆமேன் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்?
24 மூப்பர்களும், 4ஜீவன்களும். வெளி 19:4
  - தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது?
சிங்காசனம். வெளி 19:5
  - யாருடைய கலியாணம் வந்தது?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 19:7
  - ஆட்டுக்குட்டியானவரின்மனைவி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ள கொடுக்கப்பட்டது என்ன?
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம். வெளி 19:8
  - ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் யாருடைய நீதிகள் என்றழைக்கப்படுகிறது?
பரிசுத்தவான்கள். வெளி 19:8
  - ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
பாக்கியவான்கள். வெளி 19:8
  - தேவதூதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தவர் யார்?
யோவான். வெளி 19:10
  - தன்னை ஓர் ஊழியக்காரனாக யோவானிடம் கூறியவன் யார்?
தேவதூதன். வெளி 19:10
  - தன் காலில் விழுவதைத் தடுத்து தேவனைத் தொழுது கொள் என்று யோவானிடம் கூறியவன் யார்?
தேவதூதன். வெளி 19:10
  - இயேசுவைப் பற்றின சாட்சி எதின் ஆவியாயிருக்கிறது?
தீர்க்கதரிசனம். வெளி 19:10
  - பரலோகம் திறந்திருக்கையில் காணப்பட்டது என்ன?
வெள்ளைக் குதிரை. வெளி 19:11
  - உண்மையும் சத்தியமுமுள்ளவர் எக்குதிரையின் மேல் ஏறியிருந்தார்?
வெள்ளைக் குதிரை. வெளி 19:11
  - நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவர் யார்?
வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:11
  - வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் கண்கள் எதைப்போலிருந்தன?
அக்கினி ஜீவாலை. வெளி 19:12
  - வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் சிரசின் மேல் இருந்தது என்ன?
அநேக கிரீடங்கள். வெளி 19:12
  - தமக்கேயன்றி வெறொருவருக்கும் தெரியாத நாமம் யாருடைய சிரசின் மேல் எழுதியிருந்தன?
வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:12
  - தேவனுடைய வார்த்தையானவர் எதில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்?
இரத்தம். வெளி 19:13
  - வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்த வரின் நாமம் எது?
தேவனுடைய வார்த்தை. வெளி 19:13
  - வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்திருந்தவர்கள் யார்?
பரலோகத்திலுள்ள சேனைகள். வெளி 19:14
  - தேவனுடைய வார்த்தையானவரை தொடர்ந்து பின் சென்றவர்கள் யார்?
பரலோகத்தின் சேனைகள். வெளி 19;14
  - தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது?
கூர்மையான பட்டயம். வெளி 19:15
  - யாரை வெட்டும்படி தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டது?
புறஜாதிகள். வெளி 19:15
  - இருப்புக்கோலால் புறஜாதிகளை அரசாளுபவர் யார்?
தேவனுடைய வார்த்தையானவர். வெளி 19:15
  - சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பவர் யார்?
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:15
  - ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வகைகள்?
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16
  - ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது?
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16
  - சூரியனில் நின்று கொண்டிருந்தவன் யார்?
தூதன். வெளி 19:17
  - சூரியனில் நின்று கொண்டிருந்த தூதன் எவைகளை சத்தமிட்டு அழைத்தான்?
பறவைகள். வெளி 19:17
  - மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
பறவைகள். வெளி 19;17-18
  - மிருகமும் பூமியின் ராஜாக்களும் யாரோடே யுத்தம் பண்ண கூடி வந்தார்கள்?
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:19
  - யுத்தத்தில் பிடிக்கப்பட்டது எது?
மிருகம். வெளி 19:20
  - மிருகத்தோடு கூட பிடிக்கப்பட்டவன் யார்?
கள்ளத்தீர்க்கதரிசி. வெளி 19:20
  - கள்ளத்தீர்க்கதரிசி எவர்களை மோசம் போக்கினான்?
மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் சொரூபத்தை வணங்கினவர்கள். வெளி 19:20
  - அக்கினி கடலில் எரிந்தது என்ன?
கந்தகம். வெளி 19:20
  - கந்தகம் எரிகிற அக்கினி கட்டிலில் தள்ளப்பட்டவர்கள் யார்?
மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும். வெளி 19:20
  - குதிரையின் மேல் ஏறினவரின் வாயிலிருந்து புறப்பட்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தினால் திருப்தியடைந்தவை எவை?
பறவைகள். வெளி 19:21
  - வானத்திலிருந்து இறங்கி வந்த தூதனின் கையில் எதின் திறவுகோல் இருந்தது?
பாதாளம். வெளி 20:1
  - பெரிய சங்கிலியை கையிலே பிடித்திருந்தவன் யார்?
வானத்திலிருந்திறங்கி வந்த தூதன். வெளி 20:1
  - பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதன் எதைப் பிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்தான்?
வலுசர்ப்பம். வெளி 20:2
  - வலுசர்ப்பமானது எத்தனை வருடம் கட்டி வைக்கப் பட்டது?
1000 வருஷம். வெளி 20:2
  - ஜனங்களை மோசம் போக்காத படிக்கு பாதாளத்திலே தள்ளப்பட்டது எது?
வலுசர்ப்பம். வெளி 20:2
  - வலுசர்ப்பத்தை பாதாளத்தில் அடைத்து வைத்து அதின் மேல் தூதன் எதைப் போட்டான்?
முத்திரை. வெளி 20:2
  - கொஞ்ச காலம் விடுதலையாக வேண்டுவது எது?
வலுசர்ப்பம். வெளி 20: 3
  - இயேசுவிற்கு சாட்சியாய் வாழ்ந்தவர்கள் இயேசுவு டன் எத்தனை வருடங்கள் அரசாண்டார்கள்?
1000 வருடம். வெளி 20:4
  - எவைகளினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட வர்கள் கிறிஸ்துவுடன் 1000வருஷம் அரசாண்டார்கள்?
இயேசுவைப் பற்றிய சாட்சி, தேவனுடைய வசனம். வெளி 20:4
  - எதை வணங்காமலும் அதின் முத்திரையைத் தரித்து கொள்ளாமலும் இருந்தவர்கள் 1000வருஷம் அரசாண்டார்கள்?
மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4
  - எதை நெற்றியிலும் கையிலும் தரிக்காதவர்கள்1000 வருஷம் அரசாண்டார்கள்?
மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4
  - ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையாதவர்கள் யார்?
மரணமடைந்த மற்றவர்கள். வெளி 20:5
  - எதற்குப் பங்குள்ளவன் பாக்யவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்?
முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:6
  - முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்கள் மேல் அதிகாரம் பாராட்ட முடியாதது எது?
இரண்டாம் மரணம். வெளி 20:6
  - தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருக்கிறவர்கள் யார்?
முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவன். வெளி 20:6
  - ஆயிரம் வருட அரசாட்சி யின் முடிவில் விடுதலை பெறுபவன் யார்?
சாத்தான். வெளி 20:7
  - பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள் யார்?
கோகு, மாகோகு. வெளி 20:8
  - கோகையும் மாகோகையும் மோசம் போக்கு படிக்கு புறப்படுபவன் யார்?
சாத்தான். வெளி 20:8
  - சாத்தான் எவர்களை யுத்தத்திற்கு கூட்டிக்கொள்ளும்படிக்கு புறப்படுவான்?
கோகையும் மாகோகையும். வெளி 20:8
  - யாருடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்?
கோகு, மாகோகு. வெளி 20:8
  - பூமியெங்கும் பரம்பினவர்கள் யார்?
கோகேகு, மாகோகு. வெளி 20:9
  - கோகுவும் மாகோகுவும் எவைகளை வளைந்து கொண்டார்கள்?
பரிசுத்தவான்களுடைய பாளையம், பிரியமான நகரம். வெளி 20:9
  - தேவனால் வானத்திலிருந்து எது இறங்கி கோகுவையும் மாகோகுவையும் பட்சித்து போட்டது?
அக்கினி. வெளி 20:9
  - அக்கினியும் கந்தகமுமான கடலில் தள்ளப்படுபவன் யார்?
பிசாசானவன். வெளி 20:10
  - வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டவர் யார்?
யோவான். வெளி 20:11
  - வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சமுகத்திலிருந்து அகன்று போனவை எவை?
வானம், பூமி. வெளி 20:11
  - எவைகளுக்கு இடம் காணப்படவில்லை?
வானம், பூமி. வெளி 20:11
  - மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் யாருக முன்பாக நின்றார்கள்?
தேவனுக்கு முன்பாக. வெளி 20:12
  - மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்டவை எவை?
புஸ்தகங்கள். வெளி 20:12
  - மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்ட வேறொரு புஸ்தகம் எது?
ஜீவ புஸ்தகம். வெளி 20:12
  - தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தவர்கள் யார்?
மரித்தோர். வெளி 20:12
  - மரித்தோர் எவைகளில் எழுதப்பட்ட படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்?
தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்ட புஸ்தகங்கள். வெளி 20:12
  - தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தவை எவை?
சமுத்திரம், மரணம், பாதாளம். வெளி 20:13
  - மரணமும் பாதாளமும் எதிலே தள்ளப்பட்டன?
அக்கினிக்கடல். வெளி 20:14
  - மரித்தோர் நியாயத்தீர்ப்படைவது எத்தனையாவது மரணம்?
இரண்டாம் மரணம். வெளி 20:13-14
  - ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாதவன் எங்கே தள்ளப்படுவான்?
அக்கினிக்கடல். வெளி 20:15
  - புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டது யார்?
யோவான். வெளி 20:1
  - முந்தின வானமும் முந்தின பூமியும் என்ன ஆனது?
ஒழிந்து போனது. வெளி 21:1
  - புதிய வானமும் புதிய பூமியும் காணப்பட்ட போது இல்லாமற் போனது எது?
சமுத்திரம். வெளி 21:1
  - பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பரிசுத்த நகரம் எது?
புதிய எருசலேம். வெளி 21:2
  - புதிய எருசலேம் என்பது என்ன?
பரிசுத்த நகரம். வெளி 21:2
  - தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருநதது எது?
புதிய எருசலேம். வெளி 21:2
  - தேவனுடைய வாசஸ்தலம் எவர்களிடத்திலிருக்கிறது?
மனுஷர்களிடம். வெளி 21:3
  - மனுஷர்களிடம் வாசமாயிருப்பவர் யார்?
தேவன். வெளி 21:3
  - தேவன் யாருடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்?
மனுஷர்கள். வெளி 21:4
  - மரணமும் துக்கமும் அலறுதலும் வருத்தமும் எங்கே இல்லை?
புதிய எருசலேம். வெளி 21:4
  - முந்தினவைகள் என்ன ஆயின?
ஒழிந்து போயின. வெளி 21:4
  - சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர் கூறியது என்ன?
நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளி 21:5
  - சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த வரின் வசனங்கள் எப்படிப்பட்டவைகள்?
சத்தியமும் உண்மையுமானவைகள். வெளி 21:5
  - தாகமாயிருப்பவனுக்கு இலவசமாய் கிடைப்பது எது?
ஜீவத்தண்ணீர். வெளி 21:6
  - எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்பவன் யார்?
ஜெயங்கொள்ளுகிறவன். வெளி 21:7
  - தேவனுடைய பார்வையில் ஜெயங்கொள்ளுகிறவன் யார்?
அவருடைய குமாரன். வெளி 21:7
  - இரண்டாம் மரணம் என்று கூறப்படட்டுள்ளது எது?
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல். வெளி 21:8 .
  - பெரிதும் உயரமுமான பர்வதத்தில் ஆவியில் கொண்டு போகப்பட்டவன் யார்?
யோவான். வெளி 21:10
  - எருசலேமாகிய பரிசுத்த நகரம் எதைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வந்தது?
பரலோகம். வெளி 21:10
  - தேவனுடைய மகிமையை அடைந்தது எது?
பரிசுத்த நகரம். வெளி 21:10
  - ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி யார?
புதிய எருசலேம். வெளி 21:10
  - புதிய எருசலேம் எவை களைப் போன்று பிரகாசமாயிருந்தது?
இரத்தினக்கல், வச்சிரக்கல். வெளி 21:11
  - புதிய எருசலேமுக்கு எப்படிப்பட்ட மதில் இருந்தது?
பெரிதும் உயரமுமான. வெளி 21:12
  - புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை வாசல்களிருந்தன?
12 வாசல்கள். வெளி 21:12
  - புதிய எருசலேமின் வாசல்களின் அருகே இருந்தவர்கள் யார்?
12 தூதர்கள். வெளி 21:13
  - புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களிலேயும் யாருடைய நாமம் எழுதப்பட்டிருந்தது?
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். வெளி 21:13
  - நகரத்தின் மதிலுக்கு எத்தனை அஸ்திபாரக் கற்களிருந்தன?
12 வெளி 21:14
  - அஸ்திபாரக் கற்கள் மேல் யாருடைய நாமங்கள் பதிந்திருந்தன?
ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள். வெளி 21:14
  - யோவானோடே பேசினவன் அளக்கிறதற்காக எதைப் பிடித்திருந்தான்?
பொற்கோல். வெளி 21:15
  - யோவானோடே பேசினவன் எவைகளை அளக்கிறதற்குப் பொற்கோலைப் பிடித்திருந்தான்?
நகரத்தையும் அதின் வாசல்களயும், மதில்களையும். வெளி 21:15
  - எருசலேம் நகரம் எவ்வடிவத்திலிருந்தது?
சதுரம். வெளி 21:16
  - எருசலேம் நகரத்தின் அளவு என்ன?
12;000 ஸ்தாதி. வெளி 21:16
  - எருசலேம் நகரத்தின் மதிலின் அளவு என்ன?
144 முழம். வெளி 21:17
  - எருசலேம் நகரத்தின் மதில் எதினால் கட்டப்பட்டிருந்தது?
வச்சிரக்கல். வெளி 21:18
  - எருசலேம் நகரம் எப்படி இருந்தது?
சுத்தப்பொன்னாய். வெளி 21:18
  - எருசலேம் நகரம் எதற்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது?
தெளிந்த பளிங்கு. வெளி 21:18
  - நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் எவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததன?
சகலவித இரத்தினங்கள். வெளி 21:19
  - முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
வச்சிரக்கல். வெளி 21:19
  - இரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
இந்திர நீலம். வெளி21:19
  - மூன்றாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்ப்பட்டிருந்தது?
சந்திரகாந்தம். வெளி 21:19
  - நான்காவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
மரகதம். வெளி 21:19
  - ஐந்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
கோமேதகம். வெளி 21:20
  - ஆறாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
பதுமராகம். வெளி 21:20
  - ஏழாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
சுவர்ண ரத்தினம். வெளி 21:20
  - எட்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
படிகப்பச்சை. வெளி 21:20
  - ஒன்பதாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
புஷ்பராகம். வெளி 21:20
  - பத்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
வைடூரியம். வெளி 21:20
  - பதினோராவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
சுநீரம். வெளி 21:20
  - பன்னிரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
சுகந்தி. வெளி 21:20
  - நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் எவைகளாயிருந்தன?
12 முத்துக்கள். வெளி 21:21
  - தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது எது?
நகரத்தின் வீதி. வெளி 21:21
  - புதிய எருசலேமின் ஆலயம் யார்?
கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவரும். வெளி 21:22
  - நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க எவைகள் இல்லை?
சூரியன், சந்திரன். வெளி 21:23
  - நகரத்தை பிரகாசிப்பது எது?
தேவனுடைய மகிமை. வெளி 21:23
  - நகரத்தின் விளக்கு யார்?
ஆட்டுக்குட்டியானவர். வெளி 21:23
  - நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார்?
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள். வெளி 21:24
  - தங்கள் மகிமையையும் கனத்தையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருபவர்கள் யார்?
பூமியின் ராஜாக்கள். வெளி 21:24
  - இராக்காலம் இல்லாத இடம் எது?
புதிய எருசலேம் நகரம். வெளி 21:25
  - எதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதில்லை?
புதிய எருசலேம். வெளி 21:25
  - எவைகள் புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை?
தீட்டுள்ளதும், பொய்யையும் அருவருப்பையும் நடப்பிக்கிறவைகள். வெளி 21:27
  - புதிய எருசலேம் நகரத்தில் பிரவேசிப்பவர்கள் யார்?
ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். வெளி 21:27