யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அதில் ஒருவனின் பெயர் அபியாம், மற்றொருவனின் பெயர் நாதாப். யெரொபெயாம் என்றால் ஜனம் பெருத்தவன் என்று பொருள். இவன் எப்பிராயீம் கோத்திரத் தைச் சார்ந்தவன். இவன் காரிய சமர்த்தனாகவும், பராக்கிரமசாலியாகவும் இருந்தான். யெரொபெயாம் சாலொமோன் ராஜாவிடம் ஊழியக்காரனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவுமிருந்தான். சாலொமோன் தன்னுடைய வேலைக் காரனின் மகனாக இருந்தாலும் யெரொபெயாமின் திறமைகளை அறிந்திருந் தான். சாலமோன் ராஜா ஒவ்வொரு கோத்திரத்தையும் விசாரிக்க ஒவ்வொரு தலைவனை நியமித்திருந்தான். அதன்படி யோசேப்பு வம்சத்தாரின் காரியங் களை விசாரிக்க யெரொபெயாமை விசாரணைக்காரனாக வைத்தான் (1இராஜாக் கள் 11 : 28.) இதேபோல் போத்திபார் யோசேப்பை தன்னுடைய வீட்டுக்கு விசார ணைக்காரனாக வைத்ததை ஆதியாகமம் 39 : 4 ல் பார்க்கிறோம். இஸ்ரவேலின் முதல் ராஜா யெரொபெயாம். 

அகியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் (1 இராஜாக்கள் 11 : 29 – 39):

சாலொமோனுக்கு ஊழியக்காரனாக இருந்த காலத்திலே சாலொமோனுக்கு விரோதமாக யெரொபெயாம் செயல்படுகிறான் (1 இராஜாக்கள் 11 : 11 : 26, 2 நாளா கமம் 13 : 6).ஆதலால் யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறான். அவ்வாறு வெளியே போகிற போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்க தரிசி புதுச்சால்வையைப் போர்த்து வழியிலே நின்று கொண்டிருந்தார். யெரொ பெயாம் போகிற வழியிலே அவரைக் கண்டான். இருவரும் வயல் வெளியிலே தனித்திருக்கையில், அகியா தான் போர்த்துக் கொண்டிருந்த புதுச்சால்வையைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்து, யெரொபெயாமை நோக்கிப் பத்துத் துண்டு களை எடுத்துக்கொள் என்றார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்து அவனுக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பதாகக் கூறுவதாகவும், கர்த்தரின் தாசனாகிய தாவீதுக்காகவும், எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் ரெகொபெயாமுக்கு இருக்கும் என்றும் வாக்களிக்கிறார் என்றான். அதுமட்டுமல் லாமல் யெரொபெயாம் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் கர்த்தர் கூறினார். அது என்னவென்றால்:

  1. அவன் தன் மன விருப்பத்தின்படி ஆண்டு கொள்ளலாம்.
  2. கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும்.
  3. கர்த்தர் காட்டும் வழிகளில் நடக்க வேண்டும்.
  4. கர்த்தருடைய பார்வைக்குத் தாவீது செய்ததுபோல செம்மையானதைச் செய்ய வேண்டும்.
  5. இவைகளைத்தையும் செய்தால், தாவீதுக்குக் கட்டினது போல நிலையான வீட்டையும், இஸ்ரவேலையும் தருவேன் என்று கூறிவிட்டு, ஆகிலும் எந்நாளும் அப்படி இராது என்றார்.

சாலொமோன் செய்த காரியங்கள்:

சாலமோனிடமிருந்துப் பிடுங்கக் காரணம் முதலில் சாலொமோன் பார்வோ னின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல் வேறு அநேக அந்நிய ஸ்திரீகள் மேலும் ஆசை வைத்தான் (1 இராஜாக்கள் 11: 1). கர்த்தர் யாரிடமெல்லாம் ஐக்கி யம் வைக்கக்கூடாதென்று சொல்லியிருந்தாரோ அவர்களோடெல்லாம் ஐக்கி யம் வைத்துக் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றாமல் போனான் (11 :2, 4). அதனால் கர்த்தர் சாலொமோனுக்குப் பல விதமான எதிர்ப்புகளுக்கு ஒப்புக் கொடுத்தார் (11 : 14). ஏதோமியனாகிய ஆதாத், சீரியாவின் ரேசோன், இஸ்ரவேலில் எழும்பிய யெரொபெயாம் என்பவர்கள் சாலொமோனுக்கு விரோதமாக எழும்பினர். கர்த்தர் மூன்று முறை சாலொமோனுக்குத் தரிசனமானார். முதல் முறை தரிசனமாகி “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்றார் (1இராஜாக்கள் 3 : 5). இரண்டாவது முறை தரிசனமாகி அவன் கட்டின ஆலயப் பிரதிஷ்டையில் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில ளித்தார் (1 இராஜாக்கள் 9 : 3). இறுதியில் இருமுறை தரிசனமாகி அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாமென்று எச்சரித்தார் (1இராஜாக்கள் 11 : 9). 

அவன் அந்நிய தெய்வங்களைப் பணிந்து கொண்டதாலும், தாவீதைப் போலக் கர்த்தரின் வழிகளில் சாலொமோன் நடக்காததாலும், முதலில் கேட்டதையும், கேட்காததையும் கொடுத்த தேவன், அந்நேரமே அவரிடமிருந்து கோபமாகப் பறித்து, அவரது ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனா லும் ராஜ்யபாரம் முழுவதையும் சாலொமோனின் கையிலிருந்து எடுக்காமல், கர்த்தரின் கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொண்டவனும், அவரு டைய தாசனுமாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன் என்றார். கர்த்தரின் நாமம் விளங்க எருச லேமிலே தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமார னுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பதாகவும் கூறுகிறார் அதனால் யெரொ பெயாமிடம் இஸ்ரவேலின் மேல் ராஜாவாய் இருப்பதற்காகக் கர்த்தர் அவனைத் தெரிந்து கொண்டேன் என்றார். அவர் கட்டளைகளைபடியும் வழிகளின்படியும் நடந்து, செம்மையானதைச் செய்தால், கர்த்தர் அவனோடிருந்து, அவனுக்கும் நிலையான வீட்டைக் கட்டித் தருவதாகவும் கூறுகிறார் (1 இராஜாக்கள் 11 : 29 – 38). 

1 சாமுவேல் 15 : 27, 28 ல் சவுல் ராஜா கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படி யாததால், சாமுவேல் தீர்க்கதரிசி கோபத்தில் அவனை விட்டுத் திரும்பும் போது சவுல் சாமுவேலின் சால்வையின் தொங்கலைப் பிடித்ததால், அது கிழிந்து போயிற்று. அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சவுலிட மிருந்து எடுத்துப் போட்டு அவனைப் பார்க்கிலும் உத்தமமாய் இருக்கிற அவனுடைய தோழனுக்குக் கொடுப்பேன் என்றதைப் பார்க்கிறோம். இதே போல் கர்த்தர் சாலொமோனிடமும் கூறியிருந்தார் (1 இராஜாக்கள் 11 : 11 – 13). இதை யெல்லாம் கேட்ட யெரொபெயாம் திரும்பச் சாலொமோனிடம் போயிருந்தான். இவன் ராஜ துரோகம் செய்ய ஆரம்பித்தானென்று ராஜாவுக்குத் தெரிந்ததால், சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல நினைத்தான். எனவே யெரொ பெயாம் எகிப்துக்கு ஓடிப்போய் சீஷாக் என்னும் ராஜாவிடம் அடைக்கலமாக, சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்திலிருந்தான் (1 இராஜாக்கள் 11 : 40). 

ரெகொபெயாம் (1இராஜாக்கள் 12 : 1 – 17).:

அவனுக்குப் பின் ரெகொபெயாம் ராஜாவாக சீகேமில் வைத்து அபிஷேகம் பண்ணப்பட்டான். சாலமோன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாததால், ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதற்குக் காரணம் ஜனங் கள் ரெகொபெயாமிடம் சாலொமோன் ராஜா தங்கள் மேல் சுமத்தின கடினமான வேலையையும், பாரமான நுகத்தையும் குறைக்க வேண்டினர். அதற்கு ரெகொ பெயாம் மூன்று நாள் கழித்து வரச் சொல்லியனுப்பினான். ரெகொபெயாம் சாலொமோனின் சமூகத்தில் நின்ற முதியோரிடம் ஆலோசனை கேட்டதற்கு அவர்கள் அவர்களுக்கு நல்வார்த்தைகளைக் கூற ஆலோசனை கூறினர். ராஜா அவர்களது ஆலோசனையைத் தள்ளி விட்டு, தன்னோடிருக்கிற வாலிபரிடத்தில் ஆலோசனை கேட்டு, வந்த ஜனங்களிடம் அவர்கள் நுகத்தை அதிக பாரமாக் குவேன் என்றும், தன்னுடைய தகப்பனைப்போல சவுக்குகளினால் தண்டிக் காமல், தேள்களினால் தண்டிப்பேன் என்றும் உத்தரவு கொடுத்தான். எனவே ஜனங்கள் அவனை விட்டுப் பிரிந்து போயினர். ரெகொபெயாம் ராஜாவான போது 41 வயதாயிருந்த போதிலும் (14 : 21) நிதானமாகச் சிந்திக்காமல், உணர்ச்சி வசப் பட்டு ஜனங்களிடம் கடினமாகப் பேசினார். அதனால் கோபங்கொண்ட ஜனங்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்த யெரொபெயாமை அழைத்தனுப்பி, சமஸ்த இஸ்ர வேலின் மேல் ராஜாவாக்கினர். யூதா கோத்திரம் மட்டும் ரெகொபெயாமி டமிருந்தது (1இராஜாக்கள் 12 : 20). ரெகொபெயாம் தாவீதின் தெற்கு ராஜ்ஜி யத்தின் ராஜா. யெரொபெயாம் தாவீதின் வடக்கு ராஜ்ஜியத்தின் ராஜா. ரெகொ பெயாம் எருசலேமைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். யெரொபெயாம் சமாரியாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். 

யெரொபெயாமின் விக்கிரக ஆராதனை:

எருசலேமில்தான் கர்த்தருடைய தேவாலயம் இருந்தது. யெரோபெயாம் ராஜா வாக இருந்தபோது இவனுடைய ஜனங்கள் பலிசெலுத்த எருசலேமுக்குப் போக வேண்டியிருந்ததால், அதைத் தடை செய்யும் நோக்கத்தைச் சிந்தித்தான். ஏனென்றால் எருசலேமுக்குச் ஜனங்கள் சென்றால் ரெகொபெயாம் ஜனங்க ளைத் தன்பக்கம் இழுத்துக்கு கொண்டு, எல்லோரும் சேர்ந்து தன்னைக் கொன்று விடுவார்களென்று எண்ணினான். அவரை ராஜாவாக்கினது கர்த்தர். தனக்குச் சொன்னதை நம்பாமல், அவரது ஆலோசனையைக் கேட்காமல், சுய மாகச் சிந்தித்துப் பயப்பட்டான். யெரொபெயாமுக்கு அவரது நாட்டிலிருந்த அகியா தீர்க்கதரிசியிடம் கேட்க வாய்ப்பிருந்தும் (14 : 1 – 3), அவரிடம் சென்று கேட்கவில்லை. அதனால் ஜனங்களைப் போக விடாதபடி தடை செய்ய எருச லேமில் இருக்கிறது போல ஒரு ஆலயத்தைக் கட்டி இரண்டு பொன் கன்றுக் குட்டியைச் செய்வித்து, அதில் ஒன்றை பெத்தேலிலும், ஒன்றை தாணிலும் வைத்து விக்கிரக ஆராதனையைத் தொடங்கினான். யெரொபெயாமின் தேசத்தின் இரு எல்லைகளையும் அவைகள் தொட்டு நின்றது. 

ஜனங்களை மதக்கட்டுப்பாட்டுக்குள்ளும், அரசியல் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்க முடியுமெனக் கருதினான். மேலும் “இந்தத் தெய்வம்தான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த தெய்வம்” என்று ஜனங்களை நம்ப வைத்தான். விசுவாசமின்மை பயத்திற்கும், பொறாமைக்கும், சிலை வழிபாட்டிற்கும் வழி வகுத்தது. ராஜா தவறு செய்தாலும், ஜனங்களும் அவர் சொன்னதுபோல் விக்கிரகத்தையே பின்பற்றினர். வனாந்தரத்தில் ஜனங்கள் ஆரோன் மூலம் கன்றுக்குட்டியை உண்டாக்கி, அதை வணங்கி பண்டிகை கொண்டாடும் போது, தேவனுடைய கோபத்தால் இஸ்ரவேலில் பலர் அழிந்ததை யாத்தி ராகமம் 32 : 17 – 28 ல் பார்க்கிறோம். அதை அறிந்திருந்தும் மீண்டும் கன்றுக் குட்டி வணக்கத்தை ஆரம்பித்தனர். மேலும் லேவி புத்திரர்களை ஆசாரிய ராக்காமல் ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். யூதாவின் பண்டிகை கொண்டாடும் எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியில், அதாவது அவர்கள் கொண்டாடும் அதே மாதம், அதே தேதியில் பண்டிகையை ஜனங்களைக் கொண்டாட வைத்தான். 

கர்த்தர் அனுப்பிய தீர்க்கதரிசி: 13 : 1 : 10

பெத்தேல் பலிபீடத்தில் யெரொபெயாம் அந்த விக்கிரகத்துக்குத் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் போது, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்த ஒரு தீர்க்கதரிசி அங்கு வந்தார். அவர் அங்கு நின்ற ராஜாவை நோக்கிப் பேசாமல், பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். என்ன கூறினாரென்றால், 

1 இராஜாக்கள் 13 : 2,3 “ அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.”

ஆதாம் தவறு செய்த பொது கர்த்தரே நேரில் வந்தார் (ஆதியாகமம் 3 : 9). காயீன் தன்னுடைய சகோதரனைக் கொலை செய்தபோது கர்த்தர் அவனோடு பேசியதை ஆதியாகமம் 4 : 9ல் பார்க்கிறோம். இதில் யெரொபெயாமுக்காக பெயர் தெரியாத ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் அனுப்புகிறார். அவர் கர்த்தருடைய வார்த் தையுடன் வந்தார். அவர் ராஜாவைப் பார்த்துப் பேசாமல், பலிபீடத்தைப் பார்த் துப் பேசி கர்த்தர் கூறின நியாயத்தீர்ப்பைக் கூறினார். அது என்னவென்றால் யோசியா என்னும் ஒருவன் தாவீதின் வம்சத்தில் பிறப்பான். அவன் யெரொபெயாம் உண்டாக்கின பலிபீடங்களையும், மேடைகளையும் சுட்டெரித் துப் போடுவான் என்றார். யோசியா பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே அவரது பெயரையும் அவர் செய்யப் போவதையும் கர்த்தர் தெளிவாகக் கூறியதைப் பார்க்கிறோம். 

இதேபோல் ஆதியாகமம் 16 11 ல் கர்த்தருடைய தூதன் ஆகாருக்குக் குழந்தை பிறக்கும், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடச் சொல்லி, அவன் எப்படி யிருப்பான் என்றும் தெளிவாகக் கூறியதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்க்க தரிசனம் உடனே நிறைவேறாததால், அன்றைக்கே கர்த்தர் ஒரு அடையாளத் தைக் காட்டும்படி அந்தப் பலிபீடத்தை வெடிக்கும்படி செய்தார். அது வெடித்துச் சிதறி சாம்பலாயிற்று. நியாயத்தீர்ப்பின் சொற்களைக் கேட்டவுடன் யெரொபெயாம் “பிடியுங்கள் அவனை” என்று கத்தினான். அவனது நீட்டிய கை மடக்க முடியவில்லை. தீர்க்கதரிசியை கூறிய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி அப்பொழுதே நிறைவேறியது. கை மரத்துப் போனதால் அந்தத் தீர்க்க தரிசியிடம் யெரொபெயாம்,

1 இராஜாக்கள் 13 : 6 “ அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.” என்றான்.

யெரொபெயாம் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண் டிக்கொண்டு,” என்று தீர்க்கதரிசியிடம் கூறுகிறான். தனக்கு அரியணையைக் கொடுத்த தேவனை “உன் தேவன்”என்கிறான். தன்னுடைய கையைச் சரி பண்ண ஜெபம் பண்ணச் சொல்லுகிறான். அந்தத் தேவ மனிதனும் வருத்தி விண்ணப்பம் பண்ணினார். அவனுடைய கை மறுபடியும் செயல்பட்டது. இந்தத் தீர்க்க தரிச னம் நிறைவேறியதை 2 இராஜாக்கள் 23 : 15 –20 ல் பார்க்கலாம். பலிபீடத்தைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் கூறினதைப் போல எரேமியா 17 : 3 ல் மலைகளைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் உரைத்ததையும், எசேக்கியேல்37 : 5 – 7ல் ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்ததையும், மத்தேயு 11 : 23 ல் கப்பர்நகூமைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் உரைத்ததையும் பார்க்கிறோம். ராஜா தேவ மனித னிடம் தன்னுடைய வீட்டுக்கு வந்து விருந்துண்டு, இளைப்பாற அழைத்தான். அதோடு வெகுமானமும் தருவேனென்றான். அதற்கு அந்தத் தீர்க்கதரிசி கர்த் தர் தன்னிடம் இங்கு அப்பமும் தண்ணீரும் எடுக்கக் கூடாதென்று கூறியி ருப்பதால், நீர் எனக்கு வெகுமானமாக, உம்முடைய வீட்டில் பாதி கொடுத் தாலும், நான் உம்மோடு வந்து அப்பம் புசித்து தண்ணீர் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். 

யெரொபெயாமின் மகனின் சாவு: 1 இராஜாக்கள் 14 : 1 – 12

யெரொபெயாமின் மகனான அபியா மிகவும் வியாதிபட்டான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியிடம், தன்னுடைய மனைவி என்று கூறாமல் வேஷம்மாறி தன்னை ராஜாவாவாய் என்று கூறின சீலோவிலிருக்கிற அகியா தீர்க்கதரிசியிடம் போகக் கூறுகிறான். அவருக்குப் பத்து அப்பங்களையும், பணி யாரங்களையும், ஒரு கலசம் தேனையும் கொண்டு செல்லக் கூறுகிறான். எதெற் கென்றால் தன்னுடைய மகனுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவர் அறிவிக்க வேண்டுமென்பதற்காக. ஆனால் அதற்கு முன்பாகவே கர்த்தர் அகியாவினிடத்தில் யெரொபெயாமின் மனைவி வேஷம் மாறி தன்னுடைய கணவன் சொன்னபடி வியாதியாயிருக்கிற தங்களுடைய மகனுக்காக விசே ஷம் கேட்க வருகிறாள் என்று முன்னறிவித்து விட்டார். அது மட்டுமல்லாமல் அவளிடம் என்ன சொல்ல வேண்டுமென்றும் கூறிவிட்டார். அதனால் யெரொ பெயாமின் மனைவி அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் முதிர் வயதானவரென்றும், அவருடைய கண்பார்வையும் மங்கலாக இருப்பதையும் பார்த்தாள். ஆனால் அவரோ அவளுடைய நடைச் சத்தத்தைக் கேட்டவுடனே யெரொபெயாமின் மனைவியே ஏன் வேஷம் மாறி வந்திருக்கிறாய் என்று சொல்லித் தான் அவளுக்குத் துக்க செய்தியை அறிவிக்கப் போகிறேன் என்றார். 

கர்த்தர் கூறியது என்னவென்றால் கர்த்தர் ஜனத்தினின்று யெரொபெயாமை உயர்த்தினார் இஸ்ரவேலுக்கே அதிபதியாக வைத்தார். தாவீதின் வம்சத்தாரி டமிருந்த ராஜ்யபாரத்தை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொடுத்தார். ஆனால் யெரொபெயாமோ தனக்கு முன்னிருந்தவர்களைப் பார்க்கிலும் பொல்லாப்பு செய்தான் கர்த்தருக்குக் கோபமுண்டாக்க விக்கிரகங்களை உண்டுபண்ணி அத ற்கு ஆராதனை செய்தான். இவைகளினால் என்ன சாபமென்றால் யெரொபெ யாமின் பின்னடியாரைக் குப்பையைக் கழித்துப் போடுவதுபோல கழித்துப் போடு வேன் என்றார். யெரொபெயாமின் சந்நிதிகளில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும். வெளியில் சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார். மேலும் அவளிடம் அவள் பட்டணத்துக்குள் பிரவேசிக்கும் போதே அவளுடைய மகன் இறந்து விடுவான் என்றார். யெரொபெயாம் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கேட்ட பின்பும் பாவத்தை விட்டு மனந்திரும்பிக் கர்த்தரிடம் வருவதற்கு மனதில்லாமல் போனார். 

கருத்து:

தாவீது 12 கோத்திரங்களுக்கும் ராஜாவாக நாற்பது வருஷம் அரசாண்டான். சவுல் ராஜா 12 கோத்திரங்களையும் 40 வருஷங்கள் அரசாண்டான். சாலொ மோன் ராஜா 12 கோத்திரங்களையும் நாற்பது வருஷங்கள் அரசாண்டான். யெரொபெயாம் கர்த்தர் எந்த நோக்கத்திற்காக அழைத்தாரோ, அந்த அழைப் புக்குப் பாத்திரவானாக நடந்து கொள்ளவில்லை. கர்த்தருக்கு விரோதமான காரிய ங்களைச் செய்தான். தான் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவனாக இல்லாதிருந்தும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்பாகப் 10 கோத்திரங் களுக்குக் கர்த்தர் அவனை ராஜாவாக்கினார் என்பதை அவன் நினைத்துப் பார்க்க வில்லை. இது யெரொபெயாமுக்குக் கர்த்தரால் கிருபையாக இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதை அவன் தக்க வைக்கச் சிந்தித்துப் பார்க்கவில்லை. இவனுக்கும் யூத ராஜாவுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. இவன் அகியா ராஜாவோடு யுத்தம் செய்கையில் தோற்கடிக்கப்பட்டான். அதன்பின் கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான் (2 நாளாகமம் 13 : 20). யெரொபெயாம் 22 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். அவன் பிதாக்களு டன் நித்திரையடைந்த பின் அவனுடைய மகன் நாதாப் அரசனானான். கர்த்தர் நமக்கு வாய்ப்புகளையும், தாலந்துகளையும் கொடுத்திருப்பாரென்றால், அதைக் கர்த்தருக்கென்றே பயன்படுத்துவதைக் குறித்து, மிகவும் ஜாக்கிரதை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். எவர்களிடத்தில் அதிகம் கொடுக்கப் படுகிறது அவர்களிடத்தில் அதிகம் கேட்கப்படும். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago

இயேசுவின் இரகசிய வருகை

இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…

1 month ago